பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 ஆனந்த முதல் ஆனந்த வரை கோயிலுக்கு அறங்காவலராக வேண்டுமென்று, பலவகையில் முயன்று-சிலருக்கு ஏதேதோ கொடுத்து, இறுதியில் அப்பதவியைப் பெற்றார். அவரும் அவர் தந்தையாரும் நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மறுத்தனர். இளமையில் என் பாட்டனாரும் தாயாரும் எனக்கு ஊட்டிய அந்த உணர் வால் நான் அப்பணியினை ஏற்காது மறுத்ததோடு, மற்ற வரையும் அத்துறையில் நுழைய வேண்டாமென வற்புறுத்த வேண்டிய நிலையில் இருந்தேன். ஆயினும் அந்தப் பதவியால் இடையில் பலவகையில் பயன்பெற்ற சிலர் அவரைச் சூழ்ந்து செயலாற்ற, அவரும் அந்தப் பதவிக்கு ஆசைவைத்து முயன்றார்-வெற்றியும் பெற்றார். எனவே நானும் என் மனைவியும் குழந்தைகளும் அவர்களோடு கொண்ட தொடர் பினைத் துண்டித்துக் கொண்டோம். பின்பு அத்தொடர்பு ஒரளவு திரும்ப வந்ததேனும் அது முழு உள்ளப் பிணைப்பாக இல்லாமல், இறுதியில் என் மனைவியின் மறைவுக்குப் பின் அடியோடு அற்றுவிட்டது என்பதையும் இங்கே காட்டக் கடமைப்பட்டுள்ளேன். இந்தச் சூழலில் என் நெருங்கிய சுற்றத்தார் எனக் கருதும் அவர்களும் தூரத்தே நின்று விடவே நான் வேறு வகையில் என் நாட்டத்தைச் செலுத்தவேண்டியவனானேன். ஊரிலேயும் ஒற்றுமை குறைந்த காரணத்தால் பயிர் வகை களைச் செம்மையாகச் செய்ய முடியாத நிலை உருவாயிற்று. இந்த நேரத்தில் வாலாஜாபாத்தில் நான் பயின்ற பள்ளியின் பொறுப்பாளர் அப்பா, வா. தி. மாசிலாமணி அவர்களும் அங்கே செயலாற்றிய அண்ணா நா. ப. தணிகை அரசு அவர் களும் என்னை அங்கேயே வந்து பள்ளியில் தங்கிச் சில பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத் தினர். எனினும் அப்பாவுக்குப் பின் அப்பள்ளியின் நிலை என்னவாகுமோ என்ற உளத் தடுமாற்றத்தாலும் வேறு சிலருக்கு நான் அங்கே நுழைவதால் சில பலன்கள் கிட்டாது