பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 287 இந்த நூலினை நான் என் 55-ஆவது வயதில் (1969) எழுதினேன் எனக் குறித்தேன். அதுவும் நான் தங்கி இருந்த ஏர்க்காட்டு மலை உச்சியில் குறிஞ்சி மாளிகையில் இருந்து எழுதினேன். அந்த மலைவாழ்வும் அதன் இடையில் அமைந்த மக்கள் நிலையும் எனக்கு இதை எழுத ஊக்கம் ஊட்டின. எனது நூல்களில் சில சொற்பொழிவுத் தொகுப் புக்களாக அமைய, சில ஆய்வு நூலாக அமைய, சில பயண நூல்களாகவும் கட்டுரைகளாகவும் அமைந்துள்ளன. இவற்றுள் சிலவற்றை நான் மலை உச்சியிலிருந்தும், தனி இடங்களிலிருந்தும் எழுதினேன். என் இளமையின் நினைவு கள் உதகை மலை உச்சியில் இருந்து எழுதினேன் என்பதை அந்த நூலிலே குறித்துள்ளேன். அப்படியே கவிதையும் வாழ்க்கையும் போன்ற வேறு சில நூல்களையும் அங்கிருந்தே எழுதினேன். 19ஆம் நூற்றாண்டின் தமிழ் உரைநடையும், வேறுசில நூல்களும் கோடைக்கானல் மலை உச்சியிலும் அதைச் சார்ந்த சண்பகனூரிலும் எழுதப்பெற்றவை. ‘சமுதாயமும் பண்பாடும் ஈரோடு நகரை அடுத்த பெருந் துறை மருந்தகத்து விருந்தினர் விடுதியில் எழுதப்பெற்றது. சில கட்டுரைகள் குற்றாலத்தில் எழுதப் பெற்றன. அப்படியே இந்த நூலையும் ஏர்க்காட்டு மலையில் எழுதி முடித்தேன். இந்த நூல் எழுதி இன்றுப் பத்து ஆண்டுகளுக்குமேல் கழிந்து விட்டன. இதை எழுதின உடனே பதிப்பித்திருக் கலாம். இதற்குப் பிறகு எழுதிய என் நூல்கள் சிலவும் வெளி வந்து விட்டன. ஏனோ இதுமட்டும் பத்து ஆண்டுகள் கழித்து வெளிவருகின்றது. இதற்கு என்ன காரணம் என்று என்னாலேயே சொல்லமுடியாது. இப்போதாவது இது வெளி வந்தமை குறித்து நான் மகிழ்கின்றேன். இந்நூல் எழுதியபோது எனக்கு வயது ஐம்பத்தைந்துஒய்வுபெற வேண்டிய காலம். ஒய்வுபெற்றபின் நிறையப்