பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 ஆனந்த முதல் ஆனந்த வரை "இளமையின் நினைவுகளைக் கண்ட சில அன்பர்கள்-காஞ்சி யில் வாழ்ந்த சில நல்லவர்கள், அவர்களொடு தொடர்புடைய காஞ்சி வாழ்க்கையைப் பற்றியும் என்னை எழுதத் தூண்டிய காரணமும் ஒன்றாக அமைந்தது. ஆயினும் அவ்வாறு எழுதப்பெற்ற இந்த எழுத்து, பத்து ஆண்டுகள் கழித்து வெளிவரும்போது அவருள் சிலர் இல்லை. அவர் களும் இருந்து இந்த நூலின் படியினை அவர்கள் கையில் தந்திடும் வாய்ப்பினைப் பெற்றிருப்பேனாயின் நான் இன்னும் பெரிதும் மகிழ்ந்திருப்பேன். எப்படியோ இன்று இந்த நூல் என் நூல் வரிசையில் ஒன்றாக இடம்பெறுகின்றது. இதைத் தொடர்ந்து பெரும்பாலாக அமைந்த என் சென்னை வாழ்வைப் பற்றி எழுதலாமா வேண்டாமா என எண்ண மிட்டுக் கொண்டிருக்கிறேன். இன்றுள்ள என் வாழ்நாளில் பாதிக்குமேல் சென்னை வாழ்வாகவே அமைந்துவிட்டதோடு இனியும் இச்சென்னை வாழ்வே நிலைபெறுமோ என்னுமாறு செயல்கள் அமைகின்றன. எனினும் சிற்சில சமயங்களில் எல்லாவற்றையும் விடுத்து, வேறு எங்கேனும் தனி இடத்தைச் சார்ந்து இறையருளில் ஒன்றிக் கிடக்கலாமா என்ற உணர்வும் அரும்புவதுண்டு. எது எப்படியாகும் என்று சொல்ல முடியாத வாழ்வுப் பாதையில், என் பிற்காலம் எப்படி அமையும் என நான் அறுதியிட முடியுமா? எல்லாம் அவன் செயலே என அமைதியுற்று வாழ்ந்து வருகின்றேன். எங்கோ கிராமத்தில் பிறந்து எப்படியோ வளர்ந்து, பயின்று, எங்கெங்கோ திரிந்து, பச்சையப்பரில் பாதி வாழ்வைக் கழித்து, அன்னையின் பெயரால் அமைந்த பள்ளியின் முழுப்பொறுப்பினையும் ஏற்று, இன்று செயல் புரிகின்ற நான் இனியும் இக்காஞ்சி வாழ்வு பற்றியும் பிற வற்றைப் பற்றியும் அதிகமாகக் கூறி உங்கள் பொன்னான நேரத்தையும் வீணடிக்காது இந்த அளவோடு என் எழுத்தினை இப்போது நிறுத்திக் கொள்ளுகிறேன். அனைவருக்கும் வணக்கம்.