பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 ஆன்ந்த முதல் ஆனந்த வரை காஞ்சிப் பள்ளியின் தலைவர் என்னிடம் முன்னரே இசைவு பெற்றமையின் அச்சபையின் முடிவு அவர் பக்கம் சென்றது. எனவே காஞ்சிபுரம் ஆந்திரசன் பள்ளியில் சேர்ந்தேன். பள்ளியின் தலைவராகிய திரு. ஞானாதிக்கம் அவர்களும் அவர்கள் ஒய்வுபெறும் வரையில் (அப்பள்ளியில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்) என்னை அன்புடன் போற்றிக் காத்தார். நானும் மாணவரிடத்தும் பொதுமக்கள் இடத்தும் நன்கு பழகி மதிப்பினைப் பெற்றமையின் அவர் காத்தலுக்கு உரிமையானேன். அப்பள்ளி கிறித்தவப் பள்ளி யாயினும் பல இந்து விழாக்களைக் கூட அங்கே நடத்த இசைவு தந்தார். திரு.வி.க. அவர்களைக் காஞ்சிக்கு அழைத்து அவருக்கு மணிவிழா ஆற்றியதும் அப்பள்ளி மண்டபத்திலே தான். 1941இல் என் அன்னையர் இருவரும் மறைந்த நிலையில் தொடர்ந்து நீண்ட விடுப்பினையும் தந்து ஆறுதல் கொள்ள இடந்தந்த நல்லவர் அவர். பள்ளியில் தமிழாசியர் பதவி காலியான போது நான் பரிந்துரைத்தவரையே நியமனம் செய்தவர். ஆயினும் அதற்கு அடுத்து அத்தலைமைப் பொறுப்பினை ஏற்றவர் அவருக்கு மாறுபட்டவராக இருந் தார். அத்துடன் புதிதாக வேறு தமிழாசிரியர் வந்தார். என் விருப்பப்படி வந்தவர் திருப்பதி வேங்கடேச்சுரர் தமிழ்க் கல்லூரியில் இடம் கிடைத்தமையால், சென்றுவிட வேறு ஒருவரை நியமனம் செய்ய வேண்டி வந்தது. தகுதி இல்லா திருந்தும் ஒருவரை அப்பதவியில் அமர்த்த முயன்று, அதில் வெற்றியும்பெற்றார் அவர். புதிதாக வந்தவரும் எனக்குப் புதியவர் அல்லர். நான் வாலாஜாபாத் இந்துமத பாடசாலை யில் பயின்ற காலத்து, தம் வீட்டில் என்னை இருத்தி உபசரித்த அன்றைய அப்பள்ளியின் முதல்வரேயாவர், அவரும் அவர்தம் துணைவியாரும் என்னைத் தம் மகன் எனவே போற்றியதை அங்கே குறித்துள்ளேன். (அவர்களுக்கு மகப்பேறு இல்லை) நல்லவர் அத்தகைய தமிழில் புலமை