பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பச்சையப்பரில் முப்பது ஆண்டுகள் 1944இல் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தேன். அந்த ஆண்டு மோசூர் கந்தசாமி முதலியார் அவர்கள் துணைத் தலைவர்: டாக்டர். பி.வி. நாராயணசாமி நாயுடு அவர்கள் முதல்வர். இருவருமே எனக்கு முன்பே அறிமுக மானவர்களாதலால் என்னை விரும்பி வரவேற்று வாழ்த்தினர் எனக்கு அளித்த பணிகளும் என் விருப்பத்துக்கு ஏற்ற வகையிலேயே அமைந்தன. - அடுத்த ஆண்டு மோசூரார் ஒய்வு பெற்றார். டாக்டர். மு. வ. அவர்கள் தலைமைப் பொறுப்பு ஏற்றார். 1961 வரையில் அவர் தலைமையிலேயே தமிழ்த்துறை இயங்கிற்று. இடையில் ஓராண்டு டாக்டர். துரை அரங்கனார் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அந்த நாட்களிலெல்லாம் என்பணி அமைதியாக நடைபெற்றது. மாணவர்களும் அன்புடன் பழகினர். தமிழ்த்துறை ஆசிரியர்கள் தவிர்த்து, பிற துறையினரும் என்னிடம் அன்பாகவே பழகினர். பிறர் எனக்கு வேண்டிய உதவிகளைத் தாமே வந்து செய்தனர். நான் மேலும் பட்டம் பெற்ற நிலையிலும் பிற வகையிலும் முயன்று ஆய்வுகளை நடத்தி வந்தேன். உடன் ஒய்வு நேரங்களில் வேறு பொதுப்பணிகளையும் கண்டு வந்தேன். அடிக்கடி சமயப் பொதுக் கூட்டங்கள், சொற் பொழிவுகள் ஆகியவை தொடர்பாக வெளிநாடுவெளியூருக்கும் செல்வதுண்டு. ஆயினும் கல்லூரிப் பணிக்கு இடையூறு இல்லா வகையில் விடுமுறையிலேயே பிற பணி களை மேற்கொள்வேன். அப்போது கல்லூரியில் பி.ஓ.எல். (ஆனர்ஸ்) வகுப்பு இருந்தது. ஆனால் வகுப்பில் ஒருவர், இருவர், நால்வர் எனவே மாணவர் இருந்தனர். நான் சமய இலக்கியம், இலக்கணம் போன்றவற்றை நடத்தி வந்தேன். கீழ் இடைநிலை வகுப்பில் டி (D) பிரிவு தனித்