பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 ஆனந்த முதல் ஆனந்த வரை பைந்தமிழ் பாடும் என்று பாரோர் போற்றிய நிலையில் இங்கே தமிழ் வளமுற்றிருந்தது. நாராயணசாமி நாயுடு அவர்களுக்குப்பின் (1947இல் என எண்ணுகிறேன்) ஆங்கிலப் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கல்லூரி முதல்வரானார். தொடர்ந்து 1961 வரையில் இருந்தார். நீண்டகாலம் முதல்வராக 66 வயது வரை இருந்தவர் அவர் என்று அப்போது பாராட்டப் பெற்றவர். அக்காலத்திலும் எங்கள் தமிழ்த்துறை நன்கு இருந்தது. பி.ஓ.எல். (ஆர்னர்ஸ்) மாறி, பி.ஏ. (ஆனர்ஸ்) என 'ஆயிற்று. தமிழுக்குத் தனித்தன்மையாக இருந்த சிறப்புப் பட்டங்கள் மாறி, பிற கலைப் பாடங்களைப் போன்றே உயர் கலைப் பட்டம் தமிழுக்கும் வழங்கப் பெற்றது. 1955இல் கல்லூரி வகுப்புகளில் புது மாற்றம் அமைந்தது. இடைநிலை, பட்டவகுப்புகளுக்குரிய 2+2 ஆண்டுகள் மாற்றம் பெற்றன. பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பு என ஓராண்டும் பட்ட வகுப்பு மூன்றாண்டும் என மாறின. எனவே மேலை ஆனர்ஸ் என்ற நிலைமாறி முதுகலை (M.A., M.Sc., M.Com) என்ற இரண்டாண்டு பயிலும் நிலை உண்டாயிற்று. அக்காலத்தில் தமிழைப் பொறுத்த வரையில் வேறு சில கல்லூரிகளிலும் முதுகலை வகுப்பு தொடங்கப்பெற்றது. பின் 1963க்குப்பின் மதுரைப் பல்கலைக்கழகம் தொடங்கியபின் தமிழ் பல கல்லூரிகளில் இடம் பெற்றது. பச்சையப்பரில் 1961இல் திரு. கிருஷ்ண மூர்த்தி அவர்கள் ஒய்வு பெற்றபின் பொருளாதாரப் பேராசிரியர் 63 வயதில் வந்த இராஜேஸ்வரன் அவர்கள் இரண்டாண்டுகள் தலைவராக இருந்தார், அவரும் தமிழில் பற்றுடையவர் ஆனமையின் நாங்கள் சிறப்புறவே இருந்தோம். அதே ஆண்டில்தான் (1961) நான் தமிழ்த் துறைத் தலைமைப் பொறுப்பேற்றேன். அந்த ஆண்டின்