பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 ஆனந்த முதல் ஆனந்த வரை 1955இல் ஷெனாய் நகரில் செயலாளனாக இருந்து திரு வி.க.” பள்ளியைத் தொடங்கினேன். பிறகு என் அன்னையின் பெயரால் 1968இல் வள்ளியம்மாள் கல்வி அறம் அமைத்து, கல்லூரியில் இருக்கும்போது, வளர்த்து ஒரு மேநிலைப் பள்ளியாக நடத்திவந்தேன். இவ்வாறு கல்லூரிப்பணிக்கு இடையூறு இன்றி, பிறகல்விப் பணிகளையும் செய்து வந்தேன். - - நான் தலைமையேற்ற துறையின் ஆசிரியர்களிடம் நான் இரண்டினைப்பற்றி வற்புறுத்துவேன். ஒன்று அவர்கள் ஆய்வுப் பட்டம் பெறவேண்டும் என்பது. மற்றொன்று ஒவ்வொருவரும் சொந்த வீட்டில் வாழவேண்டும் என்பது. என் சொல்கேட்ட அனைவரும் நன்கு செயலாற்றினர். இன்று அத்துறையில் ஆய்வுப்பட்டம் பெறாதவர் ஒருவரும் இல்லை; அப்படியே தனக்கென வீடு இல்லாதவரும் ஒருவரும் இலர். மேலும் ஒருசிலர் வேறு பொதுப்பணிகளிலும் ஈடுபட்டுத் தொண்டாற்றினர். காலம் செல்லச் செல்ல, தமிழ் பயில மாணவர் அதிக விருப்பம் செலுத்த, வகுப்பு எண்ணிக்கை அதிகமாயிற்று. முதுகலைக்கெனப் பல்கலைக்கழகம் வரையறுத்த முப்பது இடத்துக்கு மேலும் நாற்பதுவரை இடம் பெறவேண்டிய தாயிற்று. ஆடவரும் பெண்டிரும் கலந்து பயின்றனர். அவ்வாறு பயின்றவர்ளுள் ஆடவர் ஐவர் உடன்பயின்ற பெண்களையே மணந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் இன்று சிறக்கவாழ்கின்றதைக் காண என் மனம் மகிழ்ச்சி யுறுகின்றது. அவர்கள் அடிக்கடி இன்றேனும் ஒருசில வேளை களில் வந்து என் வாழ்த்தினைப் பெற்றுச் செல்வர். எங்கள் துறை விரிவடைய, புதிய ஆசிரியர்கள் நியமிக்க வேண்டிய நிலை உண்டாயிற்று. மேலுள்ளவர்கள் ஒய்வு பெற்றபோதும் பிற பணிகளின் வழி விலகிய போதும் புதியவர்கள் நியமனம் பெற்றனர். ஒவ்வொரு முறையும்