பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 ஆனந்த முதல் ஆனந்த வரை நான் தமிழ்த்துறையில் பொறுப்பேற்றபின் சில ஏற்பாடு களைச் செய்தேன். துறைக்கெனத் தனி நூல் நிலையம் கண்டேன். எனினும் நூல்களை வைப்பதற்கு இரும்பு, மர அலமாரிகள் இல்லை. எனவே பட்டவகுப்பு, புகுமுகவகுப்பு. களுக்குரிய மொழிபெயர்ப்பு நூலேடுகளை அச்சிட்டு மாணவர்களுக்குத் தந்து, அதில் மிகும் தொகையில் நல்ல அலமாரிகள் (நான்கு என நினைக்கிறேன்) வாங்கி, பலபுதிய நூல்களும் வாங்கி, துறைக்கு நல்லநூல் நிலையம் கண்டேன். உடன் தட்டச்சுக்கென, ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒவ்வோர் இயந்திரம் வாங்கினேன். கல்லூரி அலுவல் தொடர்பான தமிழ்வழித் தட்டச்சு வேண்டியவர் இதைப் பயன்படுத்துவர். இவையன்றி, துறை ஆசிரியர்கள், முதல்வர், அவர்களுடன் ஆண்டு இறுதியில் ஒருசிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்வர். நல்லவிருந்து; பின் அனைவரும் வேண்டும் ஒரு திரைப்படம் பார்த்தல் என்ற வகையில் அது அமையும். அத்துடன் அன்றைய மதிப்பில் சுமார் 20 அல்லது 25 ரூபாய் அளவில் பைகள், பேனாக்கள் போன்றவை ஒவ்வொருவருக் கும் அன்பளிப்பாக வழங்கப்பெறும். இவ்வாறெல்லாம் இருந்து நன்குவளர்த்து, நான் ஒய்வு பெற்ற வேளையில் அவையனைத்தையும் ஒரு பெருந் தொகையுடன் அடுத்த வரிடம் ஒப்படைத்து வந்தேன். எங்கள் பச்சையப்பர் கல்லூரி ஒரு சிறு அரசியல் அரங்க மாகத் திகழ்ந்தது. எனினும் அன்று மாணவர் வரம்பு கடவாமல் பாடங்களை ஒழுங்காகப் பயின்று, பின் அரசியலில் ஈடுபடுவார்கள். எங்கள் மாணவர்கள் இன்று எல்லாக்கட்சி களிலும் உள்ளனர். இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிச் செயலராக உள்ள திரு. தெய்வசிகாமணி அவர்கள். துணைத் தலைவராக உள்ள மணிவர்மா, முன்னாள் கவர்னர் இராமச்சந்திரன் போன்றவர்கள் கல்லூரி மாணவர்களே. தி.மு.க.வில் உள்ள துரைமுருகன், தமிழ்க் குடிமகன் போன்ற