பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 309 கொண்டு வந்தோம்; ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி விடை பெற்றனர். நாங்கள் அன்று பகல் 11 மணிக்கே விமான வழி தில்லிக்குப் புறப்படப் போவதாகச் சொன்னமை யின் மதிய உணவு பற்றி ஒன்றும் பேசாது சென்றனர்; இன்றேல் அதையும் கொண்டு வந்திருப்பர் போலும், காலையில் அவர்கள் தந்த இட்டலி முதலின நாங்கள் (20 பேர்) சாப்பிட்டும் மிக அதிகமாக இருந்தன. உடன் பக்கத்தில் இருந்த மற்றவருக்கும் தந்தோம் பச்சையப்பரில் பயின்ற மாணவர்தம் பாசம் அத்தகையது; அளவிடற்கரியது. நான் பச்சையப்பரில் பணியாற்றியபோது பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டேன். துணை முதல்வரான் பிறகு சில பொறுப்புகள் தனியாகவிடப் பெற்றன. அதற்கு முன்பே சில ஆண்டுகள் நூல் நிலையப் பொறுப்பும், சில ஆண்டுகள் கட்டுறவுப் பண்டகசாலைப் பொறுப்பும் சில ஆண்டுகள் விளையாட்டுக் குழாம் பொறுப்பும் ஏற்று வந்தேன். அக்காலத்திலெல்லாம் நான் விதிகளைக் கடுமை யாக மேற்கொண்டவன் என்ற பெயரெடுத்தேன். என்றாலும் அவையெல்லாம் செம்மையாக இயங்கின. மாறுபட்ட சிலர் கூடப் பின்வந்து, அவற்றின் இயக்கம், செயல்பாடுகளைப் போற்றிச் சென்றனர். எல்லா வகையிலும் பச்சையப்பரே என்னை உலகுக்கு அறிமுகம் செய்தவர் என்றால் அது பொருந்தும். அக்காலத் தில்தான் நான் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி னேன், நூல்களுக்குப் பாராட்டும் பரிசும் மாநில அரசிடமும் மத்திய அரசிடமும் பெற்றேன். மலேயா சென்றேன்; காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பலவிடங்களில் பேசினேன். இலங்கைக்கு மூன்று முறை சென்றேன். வேறு பத்திரிகைத்துறை, சமயத்துறை போன்றவற்றிலெல்லாம் பணியாற்றினேன் (இவை பற்றித் தனித்தனியே எழுத நினைக்கிறேன்) பலப்பல நல்ல நண்பர்கள்-தலைவர்கள்