பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&ళ இளமையின் கினைவுகள் 29 காகச் சொன்னார்கள் என்றால் நமக்காகத்தான். வெளியே சென்ற தவளை வீடு திரும்பவில்லை, எந்த நேரத்திலோ சாவு பிடித்துக்கொண்டது. மனிதன் வாழ்வும் இப்படித் தான். இவன் என்றைக்கும் இருப்பானா? வெளியே சென்றவன் வீடு திரும்புவானோ வரமாட்டானோ? யார் கண்டார்கள்? எந்த வேளையிலும் சாவு வரும். மனிதன் செத்து விடுவான். ஆகையினால் அவன் இருப்பதற்குள் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறி நீதி புகட்டுவார்கள். அன்றைக்கு என் பிஞ்சு உள்ளத்தில் அவற்றின் பொரு ளெல்லாம் நன்கு பதியவில்லை என்றாலும் இன்று விளங்கு கிறது. அதுவும் ஒருநாளைக்குப் பல அபாயங்கள் நடைபெற வாய்ப்பளிக்கும் விமானம், பேருந்து, இரயில் போக்கு வரத்துக்கள் அதிகமான இன்றை நாளிலே புறப்பட்டவர் வீடு திரும்பிய பின்தான் வாழ்வது நிச்சயம் என்பதை எல்லாரும் அறிகிறோம். எப்படியாயினும் பாட்டியின் உரையால் மக்கள் மாய்வது எப்போது என அறியாத வகையில் இப்பவோ, பின்னையோ, சற்று நேரத்திலோ அமையும் என்பதும், ஆகவே அந்த வாழும் சிறிது நேரத்திலே எவ்வளவு நல்ல செயல்கள் செய்ய முடியுமோ அத்தனையும் செய்துவிட வேண்டும் என்பதும், அதுவே மனித வாழ்வின் குறிக்கோளாக அமையவேண்டும் என்பதும் நன்கு விளங்குகின்றனவன்றோ! இதுபோன்றே பாட்டி எத்தனையோ பாட்டுக்களையும் கதைகளையும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவற்றை யெல்லாம் நான் மறந்தேவிட்டேன் என்னலாம். பிற்காலத் தில் என் உழவுத்தொழிலை விட்டு, இப்படி ஓர் ஆசிரியனாக வந்து இவற்றை எல்லாம் எழுதும் வாய்ப்பும் எனக்குக் கிடைக்கும் என்பதை அன்றே நான் எப்படியாவது அறிந் திருப்பேனாயின் ஒருவேளை ஒரு நோட்டுப் புத்தகத்தில் பாட்டி சொன்ன அத்தனையும் குறித்துவைத்துக் கொண்