பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 - ஆனந்த முதல் ஆனந்த வரை அரசியல்வாதிகள்-ஆன்மிக நெறியாளர் எனப் பலர் எனக்கு அறிமுகமாயினர். இவ்வாறு எல்லாவகையிலும் முப்பது ஆண்டுகள் என்னை ஏற்று வாழ்வு வழங்கிய பச்சையப்பரை ஈன்ற அன்னையினும் பெரிதும் போற்றி மகிழ்கின்றேன். ஒருவித மாறுபாடும் வேறுபாடும் இன்றி (வாழ்விலே வாழ்க்கைத் துணை பிரிந்த நிலை ஒன்றைத் தவிர) அமைதி யாகக் கழிந்த அந்த முப்பது ஆண்டுகள் பற்றி எத்தனை எத்தனையோ பக்கங்கள் எழுதலாம்; எண்ணம் அளவின்றி வளர்கின்றது. (ஒரு சிலவற்றைத் தனித்தனிப் பகுதியாக உடன் எழுதியுள்ளேன்) எனினும் அளவு கருதி-அமைதி கருதி இந்தநிலையோடு இந்த வாழ்வு முறை பற்றிய வரலாற்றை நிறுத்தி மேலே செல்கின்றேன். so 3. மதுரை ஆற்றொழுக்காக அமைந்த என் வாழ்வில், அரிய வாழ்க்கைத் துணையை 1958 சனவரியில் பிரிந்த நிலை ஒரு பெரிய அணையாக-அதிர்ச்சியாக அமைய, அந்தக் கல்வி ஆண்டு முடிய (மே வரை) விடுமுறை பெற்று அமைதியாக இறையருளை உன்னிக் காலம் கழித்து வந்தேன். 1948இல் அமைந்தகரையில் புதுமனை புகுந்து பத்தாண்டுகள் கழிந்த பின் ஓர் இடப்பெயர்வு நேர்ந்ததை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க இயலவில்லை. ஆம்! அடுத்த ஓராண்டு அங்கயற்கண்ணி ஆட்சி செய்யும் மதுரையில் என் வாழ்வு அமைந்துவிட்டது. - - தமிழகத்தில் ஒரே பல்கலைக்கழகமாகிய சென்னைப் பல்கலைக்கழகம் தன் எல்லையின் விரிவினைச் சுருக்க நினைத்ததோ-அன்றித் தமிழக அரசு புதிய பல்கலைக் கழகங்களைத் தமிழ்நாட்டில் நிறுவ நினைத்ததோ