பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 3.13. சொற்பொழிவாற்றினேன். சுற்றுப்பக்கத்தில் உள்ள சோழ வந்தான், விருதுநகர், காரைக்குடி, குன்றக்குடி போன்ற இடங்களுக்கும் சென்று பேசி வந்தேன். திரு. சுந்தரம் செட்டியார் அவர்கள் அவர்தம் சொந்த ஊராகிய ஆ. தெக் கூருக்குச் செல்லும் போதெல்லாம் என்னை அழைத்துக் கொண்டு செல்வார். ஓரிருமுறை அங்குள்ள அவர்தம் பள்ளி யிலும், சொற்பொழிவாற்றியுள்ளேன். மதுரைப் பெருநகரில் பல சங்கங்களும் என்னை அழைத்துப் பாராட்டின. அங்கே தான் நான் முன்னர் எழுதி வைத்த என் முதல் வாழ்க்கைக் குறிப்பாகிய இளமையின் நினைவுகள் முதல் முறையாக அச்சிடப் பெற்றது. லலிதா அச்சக உரிமையாளர் அன்புடன் அதை அழகுற அச்சிட்டு உதவினர். (அதுவே இந்நூலின் முதற்பகுதியாக சில மாற்றங்களுடன் இடம்பெற்றுள்ளது). மதுரைத் திருவள்ளுவர் கழகம் அங்கே சிறப்பாகச் செயலாற்றி வந்தது-இன்றும் பொன்விழாவினைக் கொண்டாடிச் சிறப்புறுகின்றது. அங்கே வாரந்தொறும் அறிஞர் தம் சொற்பொழிவுகள் நடைப்ெறும். அந்நிகழ்ச்சி கள் மீனாட்சி சொக்கேசம் திருக்கோயில் எல்லையிலேயே வடக்காடி வீதியில் நடைபெறும். கழகத்துக்கெனத் தனி இடமும் பாதுகாப்பான அறையும் தரப்பெற்ற நிலையில் அதன் பணி செம்மையாகச் சிறந்தது. மதுரை மாவட்டத் திலேயே சிறந்தவராகப் போற்றப் பெற்ற திரு. பொன்னம் பலத் தியாகராசர் அவர்கள் அதன் தலைவராகவும் விவேகானந்த அச்சக உரிமையாளர் அதன் செயலராகவும் பல புலவர்கள் உறுப்பினராகவும் இருக்க வள்ளுவர் கழகம் வளமார்ந்த தமிழ்ப் பயிரை வளர்த்து வந்தது; இன்றும் வளர்த்து வருகின்றது. அச்சங்கத்தே என்னைப் பத்துப் பாட்டி'னைப் பற்றித் தொடர் சொற்பொழிவாற்றக் கூறினர். நானும் இசைந்து, ஏழு வாரங்களில், ஏழு தலைப்புகளில் பத்துப்