பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 ஆனந்த முதல் ஆனந்த வரை யில் இரண்டு அறை கொடுக்காது இங்கே வந்து செர்ல்லு கிறாயே என்று எனைக் கடிந்து கொண்டார். ஆம்! புறநானூற்றுப் பாடல்களைப் பொய்க்கதை என்று கூறும் அளவுக்கு அந்த அற்புதமனிதனுக்கு உரம் வந்தது. தமிழில் யாரும் எதையும் எப்படியும் சொல்லலாம்; தமிழ் கேட் பாரற்றுக் கிடக்கின்றதல்லவா! பாரதி இதனால்தான் கொதித்தெழுந்தார். இன்றும் அந்த மடையனைப்போன்ற புல்லுருவிகள் நாட்டில் நடமாடிக்கொண்டுதானே இருக் கின்றனர். - நான் அங்கிருந்த போதுதான் தமிழகப்புலவர் குழு உருவாயிற்று. சோமசுந்தர பாரதியார் தலைமையில்தான் மதுரையில் அது 1958-59இல் உருப்பெற்றது. பலபுலவர்கள் அதில் கலந்து கொண்டனர். நான் செல்லவில்லை. எனினும் பாரதியார் வற்புறுத்தலின்பேரில் என் பெயரும் அந்த நாற்பத்தொன்பது பேரில் இடம் பெற்றதறிந்தேன். நான் நேர்மையாக யாமார்க்கும் குடியல்லோம் யாதும் அஞ்சோம் என்ற அப்பர் வழியில் நடப்பவனாதலால் என்னைப் பலர் விரும்பமாட்டார்கள். எனவே என்பெயர் அதில் இடம் பெறச் சிலர் விரும்பவில்லை என அறிந்தேன். பிறகு சில ஆண்டுகள் அதில் உறுப்பினனாக இருந்தேன். சென்னையில் ஒருமுறை நான் தமிழ்த்துறைத் தலைவனாக இருந்தபோது, எங்கள் செலவில் அக்குழுவினை அழைத்து விழா நடத்தினேன். பின் எங்கள் வள்ளியம்மாள் கல்வி அறத்தின் வழியே பள்ளியில் ஒருமுறை பெருவிழா நடத்தி னேன். எனினும் என்நேர்மை சிலருக்கு அங்கே பிடிக்க வில்லை. மதுரை மாநாட்டின் போது நடைபெற்ற புலவர் குழுக் கூட்டத்திற்கு அரசாங்கத்திடம் பயணச் செலவு பெற்றமையால் குழுவிடம் வாங்க மாட்டேன் என்று மறுத்தமை ஒரு சிலருக்குக் குற்றமாகப் பட்டது. அப்படியே வேறொரு கூட்டத்திற்குப் பள்ளிமாணவரோடு, பள்ளியின்