பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 ஆனந்த முதல் ஆனந்த வரை வந்தனர். அதன் செயலாளராக உள்ள தமிழர் இராம கிருஷ்ணன் அவர்களை நான் அறிவேனாதலால் அவர்களுக்கு இதுபற்றிக் கடிதம் எழுதினேன். நான் பம்பாய் சென்றபோது அப்பாரதிய வித்யாபவனத்தின் முதற்காரணராகிய திரு, முன்ஷி அர்ைகளை அவர்தம் இல்லத்திலே கண்டு பணிந்து அவர்தம் நல்வாழ்த்தினைப் பெற்று வந்தேன். திரு. இராம கிருஷ்ணன் அவர்களும் அவர்தம் குடும்பத்தில் இணைந்த ஒருவராக அங்கேயே தங்கி இருந்து பவனத்தின் செயல்களை மேற்பார்வையிட்டு வந்தார். அப்போது இந்த நூல் எழுதும் எண்ணம் இல்லையாதலால் அதுபற்றிப் பேசவில்லை. பின் எழுந்த போது என்னை எழுதப் பணித்தும் ஒருகருத்து வேறுபாட்டால் அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஒவ்வொரு தலம் பற்றிக்குறிப்பிடும் போதும் வடமொழிக்கு முதலிடம் தந்து தியான சுலோகங்களை முன் கூட்டியே எழுதவேண்டும் என்றனர். நான் எழுதப்பெற வேண்டிய கோயில் தமிழ் நாட்டில் உள்ளமையாலும் தமிழில் தேவாரம் பாடிய மூவர்தம் பாடல்களாலேயே அனைத்தும் திருத்தலங் களாகச் சிறந்துள்ளமையாலும் தமிழுக்கு முதலிடம் தர வேண்டும்' என்றேன், இந்த மாறுபாட்டால் அவர்கள் வேறு யாரையோ கொண்டு வேறுநூல் தமிழ் நாட்டுக் கோயில் களைப் பற்றி வெளியிட்டார்கள் என எண்ணுகிறேன். நான் சிறிது காலம் தாழ்ந்தாலும், திருப்பதிவேங்கடவன் அருளும் பொருளும் உதவ என் ஆங்கில நூலை-Ancient Temples of Tamil nadய' என்ற நூலை வெளியிட்டேன். நான் 1985இல் அமெரிக்காவுக்கும் பிற மேலை நாடுகளுக்கும் ஜப்பான் முதலிய கீழைநாடுகளுக்கும் சென்ற போது ஆங்காங்குள்ள வரலாற்றாளரும் பிறரும் இந்நூலை விரும்பி ஏற்றனர். நான் நாடுதிரும்பிய பிறகு பலருக்கும் அனுப்பிவைத்தேன்.சிறப்பாக ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் திரு. காரசிம்மா அவர்கள் தமிழ்நாட்டு வரலாற்.