பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 319 றைக் காலம் காலமாக ஆய்ந்து கரை கண்டவர். பலமுறை தமிழகம் வந்து சங்க முற்காலம் தொடங்கி இன்றைய காலம் வரை ஆண்ட அரசுகள்-சமுதாய வாழ்வு-பிற இயல்புகள் பண்பாடு ஆகியவற்றை ஆய்ந்தவர். அவர்தம் நூல் நிலையத்தே, தமிழ் நாட்டில் கிடைக்காத சிலவரலாற்று நூல் களும் காணப்பெற்றேன் (அவரைப்பற்றி என் ஏழுநாடுகளில் எழுபது நாட்கள் என்ற நூலில் விளக்கமாக எழுதியுள்ளேன்) அவர்கள் இந்நூலைப் போற்றிப் பாராட்டி ஏற்றனர். அண்மையில் சென்னை வந்தபோது, அந்நாட்டுத் தூதுவர் அலுவலகத்தில் தங்கி இருந்த காலை, எனக்குச் செய்தி அனுப்பி வரச்செய்து, கருத்துப்பல மாற்றம் செய்து கொண்டு சென்றுள்ளனர். நான் மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய போது ஒருநாள் திரு. செட்டியார் அவர்கள் ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களைக் கல்லூரிக்கு அழைத்து வந்தார். வகுப்புதோறும் காட்டிக் கொண்டே வந்தவர், என் அறையில் வந்ததும் என்னை ராஜா அவர்களுக்கு அறிமுகப் படுத்தினார். உடனே அவர் இவரா! இவரைத் தெரியுமே! இவர் சென்னையை விட்டு எங்கும் போக மாட்டாரே? எப்படி இங்கே வந்தார்? எனக் கேட்டார். செட்டியார் அவர் களும், வரமாட்டேன் என்றுதான் சொன்னார்; எங்கள் வலுக்கட்டாயத்தின் பேரில்தான் வந்திருக்கிறார் என்று கூறினார். நானும் என் குடும்பச் சூழ்நிலையைக்காட்டி, "ஒருமாற்றத்துக்காக இங்கே வந்தேன்’ எனக் கூறினேன். எனினும் மனம் நிறைவு பெறவில்லை என்பதை அவர் முகம் காட்டிற்று. நான் பச்சையப்பரில் சேருவதற்கு ராஜாதான் காரண மாக இருந்தபோதிலும், பின் என்மேல் கசப்பு உண்டாக ஒரு காரணம் இருந்தது. பச்சையப்பரில் டாக்டர் 'மு.வ'க்கு அடுத்த நிலையில் அ.மு.ப' என்ற நிலை நாடறிந்த ஒன்றா