பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 323. தனி அதிகாரமாகத் தொகுத்துக் காட்டியதைக் குறித்தேன். அவர்கள் உடனே அதை நூலாகக் கொண்டு வரவேண்டும் என்று கூறினார். அவர் ஆசையை அன்று இன்றேனும் 1982இல் திருப்பதி வேங்கடவன் அருளாலும் பொருளாலும் வெளிக் கொணர்ந்தேன். நான் மதுரையில் வாழ்ந்த காலத்தில் திருமிகு செட்டியாரும் அவர்தம் குடும்பத்தினரும் என்னிடம் மிகுந்த அன்பொடு பழகினர். அவர்தம் குடும்ப விழாக்களில் என்னையும் பங்கு கொள்ளச் செய்வர். அவர்தம் உறவினர் களையும் நன்கு அறிமுகப்படுத்தினர். அருகிலுள்ள சிவத்தலங் களுக்குச் சுந்தரம் செட்டியார் தம் காரிலேயே என்னை அழைத்துக் கொண்டு சென்றார். நான் மதுரைக்குப் போகும்போது கார் வைத்திருந்தேன். மதுரைக்கும் காரில் தான் சென்றேன். நானே ஒட்டியாகவும் இருந்தேன். எனினும் சென்ற சில நாட்களுள் ஒரு விபத்து ஏற்பட்டது. எனவே நான் ஒட்டுவதையும் நிறுத்திக் கொண்டேன். காரினையும் அங்கேயே விற்றுவிட்டேன். எனவே அவர் களுடைய காரிலேயே பல ஊர்களுக்குச் சென்றிருக்கின்றேன். சிலவிடங்களில் அவர்கள் தலைமை வகிக்க நான் பேசுவதும் உண்டு. ஒருமுறை குன்றக்குடி அடிகளார் ஆதீனத்தின்கீழ் உள்ள திருப்புத்துார் திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றார். திருநாவுக்கரசர் மதுரைக்கு வருமுன்பே, திருப்புத்துரிலேயே இறைவனைப் பாடும்போது, மதுரையை நினைத்து, மின்காட்டும் கொடிமருங்குல் உமையாட் கென்றும் விருப்பவன் காண் பொருப்புவலிச் சிலைக்கையோன் கன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி (காண் நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன் காண் பொன்காட்டிக் கடிக்கொன்றை மருங்கே நின்ற புனக் காந்தாள் கை காட்டக் கண்டு வண்டு தென்காட்டும் செழுப்புறவில் திருப்புத்துரில் - திருத்தனியான் காண் அவன் என் சிந்தையானே