பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் . - 325, என் வீட்டிற்கு எதிரே இருந்த கல்லூரி விலங்கியல் பேராசிரியர் ரங்காச்சாரி என்பவரும் அவர்தம் துணைவி யாரும் மகளாரும் அவர்தம் பிள்ளைகளும் அன்போடு பழகினர். எங்கள் பிள்ளைகள் பெரும்பாலும் அவர்கள் வீட்டில் தான் இருப்பர். அவரை எல்லாரும் மிகுந்த வைதீகர் என்பர். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் என் மூத்த அண்ண னாகவே அவர் விளங்கினார். எங்கள் பிள்ளைகள் அவர் வீட்டு அடுப்பங்கரை வரையில் செல்வர். மேலும் அந்த அன்னை யாரின் உடன்பிறந்த பார்த்தசாரதி ஐயங்கார், இங்கே சென்னையில் காவல்துறைத் துணை ஆணையராகப் பணி யாற்றி ஒய்வு பெற்றவர். நான் பள்ளி, கல்லூரிகளை அண்ணா நகரில் அமைத்த போது, எதிர் வீட்டில் இருந்த அவர்கள் எல்லாவகையிலும் துணைபுரிந்தார். பேராசிரியர் ஒய்வு பெற்றுத் தம் சொந்த ஊராகிய திருவரங்கத்திற்கு வந்த பிறகும் எங்களோடு தொடர்பு கொண்டிருந்தார். அவர்தம் மகனாரும் மகளும் சென்னைவரும் போதெல்லாம் வீட்டிற்கு. வந்து பிள்ளைகள் நலம் கண்டு செல்வர். தமிழ்த்துறையில் பணியாற்றிய பாலுசாமி என்பவரும் பலவகையில் எனக்கு உற்றவராக விளங்கினார். பின் அவர் அண்ணாமலையிலும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் திலும் பணியாற்றிய ஞான்றும் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வார். இப்போதும் சென்னையிலும் வீட்டிற்குவந்து நலம் விசாரித்துச் செல்வார். மதுரைத் தமிழ்ச்சங்கக் கல்லூரி யில் முதல்வராக இருந்த என் மாணவர் நாராயணனும் நான் அங்கே உள்ள வரையில் உற்றவராக இருந்தார். அவர்தம் கல்லூரிக்கு அடிக்கடி அழைத்துச் சென்று மாணவர்களுக்கு அறிவுரை சொல்லப்பணிப்பார். நானும் அடிக்கடி செல்வேன். பள்ளி ஆசிரியராக இருந்த திரு. சாம்பசிவம் என்பார் பல வகையில் எனக்கு உதவியுள்ளார். நாவலர் பதிப்பகம் என்று அமைத்து என் பேராசிரியர் சோமசுந்தர பாரதியார் தம்