பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 - ஆனந்த முதல் ஆனந்த வரை இருந்து, நான் பயன்பெற்றதோடு, தமிழ் இன்பப் பயனை அவர்களுக்கும் அளித்து மகிழ்ந்தேன். அங்கிருந்த நாட்களில் குறிஞ்சி ஆண்டவனை நாள்தோறும் சென்று வழிபட்டேன். அந்த நெடு உயரத்திலிருந்து கீழே தெரியும் ஆவினன்குடி யாகிய பழநிமலையினையும் பழநி ஆண்டியினையும் பார்த்து நினைத்து வணங்கி வழிபட்டேன். ஒருமுறை பன்னிரண் டாண்டுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி மலர் நிறைய மலர்ந் திருந்தது. அதைக் காணப்பெறும் பேறு பெற்றமையை எண்ணி எண்ணி ைெmவனைப் போற்றினேன். இவ்வாறு மதுரை வாழ்வு பலவகையில் எனக்கும் பிறர்க்கும் பயன்பட்டது. என்றாலும் அடுத்த (1959) மார்ச்சு இறுதியிலேயே நான் சென்னை திரும்பி விட்டேன். ஆயினும் என் வீட்டில் நான் இருந்த பகுதியில் நேரே நுழைய முடிய வில்லை. நான் மதுரை சென்றபோது, அங்கிருந்த ஒரு அன்பர் பணி நீக்கம் செய்யப் பெற்று சென்னைக்குத் திரும்பினார். எனக்கு மிக நெருங்கியவர் அவர். எனவே என்னிடம் வந்து (ஆகஸ்டில் என எண்ணுகிறேன்) நீங்கள் பூட்டி வைத்துள்ள வீட்டில் ஒருசில மாதங்கள் நான் தங்கி வேறு இடம்,பார்த்துக் கொள்ளுகிறேன். நீங்கள் வந்தாலும் மார்ச்சில் தானே வரப்போகிறீர்கள்' என்றார். நானும் பூட்டி வ்ைத்திருப்பதை அன்பர் புழங்கத் தரலாம் என எண்ணி, வாடகை ஒன்றும் இன்றி அவரை இருக்கச் சொன்னேன். அவர் நல்லவர்தான். ஏதோ என்வேளை அவரைப் பொல்லாத வராக்கிற்று போலும். வீட்டில் குடியேறியதும் அவர் வாடகை தருபவர் போன்று இது சரி இல்லை. அது சரி இல்லை. உடனே செய்ய வேண்டும். நானே சிலவற்றைச் செய்து விட்டேன். அதற்கு ஆன செலவை நீங்கள் அனுப்ப வேண்டும் என்றெல்லாம் எழுதினார். அத்துடன் அப்போது அவருக்கு அறிமுகமான ஒருவர் மாநகராட்சியின் ஆணை யராக இருந்தார். அவரிடம் வீட்டினைப் பற்றிக் குறைகள்