பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 331 என்னைக் கண்டதும் நேரே முதல்வர் அறைக்கு அழைத்துச் சென்றார். நான் முதல்வரை வணங்கி, ஐதராபாத் கடிதம் பற்றிக் குறிப்பிட்டேன். அவர்கள் உடனே ஆம்! நான்தான் ஏற்பாடு செய்தேன். பிறமாநிலங்களில் தமிழ்த்துறை வளர நம் அரசாங்கம் மானியம் தருகிறது. அதில் ஒன்று உஸ்மானியா! அங்கு நம் தமிழ்ப் பண்பாட்டினை விளக்கதமிழின் நலம்போற்றத் தக்கவர் உங்களைவிட வேறுயாரும் இல்லை என அறிவேன். நான் கூப்பிட்டுக் கேட்டால் வேண்டாம்' என்று மறுப்பீர்கள். எனவே உங்களைக் கேளாமலே உங்கள் பெயரைப் பரிந்துரைத்தேன். தமிழ் நலத்தினைப் பிறர்காண வேண்டாமா! மறுக்காது சென்று வாருங்கள்’ என்றார். உண்மையில் அவர் தமிழுக்குச் செய்ததுபோன்று வேறு எவரும் இதுவரையில் செய்யவில்லை எனலாம். இதுபற்றி என் ஓங்குக உலகம் என்ற நூலில் சற்றே விளக்கமாக எழுதியுள்ளேன். மேலும் இளமை முதலே என் வழிகாட்டியென அவர்கள் விளங்கினார்கள். ஆகவே அவர் சொற்படி செல்ல இசைந்தேன். ஆயினும் அவர்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தேன். நான் அங்கே இருக்கும்போது, முதல்வர் தில்லி செல்லுங்கால் ஒரு நாள் ஐதராபாத்தில் தங்கி, அங்குள்ள தமிழரோடு அளவளாவிச் செல்லவேண்டும் என்றேன். அவர்களும் அதற்கு இசைந்தார்கள். அப்படியே ஒருமுறை தில்லி செல்லும் வழியில் காலை 9 மணிக்கு வந்து விமானத்தி விருந்து இறங்கி முழுநாள் இருந்து மறுநாள் காலை 9க்குத் தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர். ஐதராபாத், செக்கந்திராபாத் இரண்டு இடங்களிலும் நான் ஏற்பாடு செய்திருந்த இரு கூட்டங்களிலும் பேசியதோடு, சில தமிழர் களை அழைத்துக் குறைகளையும் கேட்டறிந்தனர். அவர் சொல்காப்பாற்றிய தன்மையினை வியந்து போற்றினர் பல்லோர்,