பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 ஆனந்த முதல் ஆனந்த வரை வேறுவழிஇன்றி ஐதராபாத் புறப்பட ஏற்பாடு செய்தேன். அரசாங்க உத்தரவு ஆனதால் கல்லூரியில் தடை யின்றி ஓராண்டு விடுப்பளித்து என்னை வழி அனுப்பி வைத்தனர். டாக்டர் திரு. இலட்சுமணசாமி முதலியார் அவர் களும் என்னை வரச்சொல்லி அங்கு நான் நடந்துகொள்ள வேண்டிய வழிவகைகளை விளக்கி வாழ்த்தி அனுப்பினர். வாலாஜாபாத் அப்பா மாசிலாமணி முதலியார் அவர்கள் ஒரு வழியனுப்பு விழாவே ஏற்பாடு செய்து வாழ்த்தி அனுப்பினார். குலையில் ஒருநாள் நான் புறப்பட ஏற்பாடு செய்தேன். - அங்கே உஸ்மானியப் பல்கலைக்கழகத்தே என் மாணவர் ஒருவர் மாணிக்கம் என்பவர் பணியாற்றி வந்தார். அவருக்கு நான்வரும் நாளையும் நேரத்தையும் குறித்துக் கடிதம் எழுதினேன். காலை 8 மணி அளவில் செக்கந்திராபாத் இரெயில் நிலையத்தே அவர் வந்து ஏற்று, எனக்கென ஒதுக்கி யுள்ள மாளிகைக்கு அழைத்துச் சென்றார், எனக்கு உடன் துணையாக இருக்கவும் சமையல் முதலியவற்றைப் பார்த்துக் கொள்ளவும் ஒரு பையனை அழைத்துச் சென்றேன். அவன் பெங்களூரைச் சேர்ந்தவன்; ஏர்க்காட்டில் இருந்தவன். ஒழுங்காக இருப்பான் என அழைத்துச் சென்றேன். எனினும் அங்கே சென்றதும் பெருங்குடியனாக மாறிவிட்டமையால்சாமான் வாங்கக் கொடுத்த பணத்தையெல்லாம் குடித்துச் செலவிட்டமையால்-ஒரு சில நாட்களிலேயே அவனை அங்கிருந்து நேரே பெங்களுர் அனுப்பிவிட்டேன். அப்பெரு மாளிகையில் என் தனி வாழ்வு தொடங்கியது. பல்கலைக் கழகத்தே முதுகலை வகுப்பு (எம்.ஏ) இருந்தது. எனினும் இரண்டாண்டிலும் ஒவ்வொருமாணவரே சேர்ந்திருந்தனர். பட்ட வகுப்பில் தமிழ் பயில்வோர் நால்வர் அல்லது ஐவர்தாம் இருந்தனர். என்னுடன் அங்கே முன்பே பணியாற்றிய திரு. சிங்காரவேலர் இருந்தார். அவர் பரங்கிப் பேட்டையைச் சேர்ந்தவர்; அண்ணாமலையில்