பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 ஆனந்த முதல் ஆனந்த வரை பேசி அவர்களை ஊக்குவது உண்டு. முதுகலையில் ஒவ்வொரு மாணவரே இருந்தமையின் அதிகத் தொல்லை இல்லை. அம்மாணவருள் ஒருவர் நான் காஞ்சியில் இருந்தபோது இருந்த, சேனைத்துறைக் கணக்குப் பகுதியில் ஒய்வுபெற்ற சாரங்கபாணி நாயுடு அவர்களின் மகள் வழிப் பெயர்த்தி ஆவார்கள். மற்றொருவர் ஓர்உயர் அதிகாரியின் மகளார். இருவர்தம் பெற்றோரும் என்னை அவர்கள் வீடுகளுக்கு அழைத்துப் பேசி விருந்தளிப்பர். செக்கந்திராபாத்தில் பலதமிழர்கள் வாழ்கின்றனர். :Deccan Herald' என்ற ஆங்கிலத் தினசரிப் பத்திரிகையினை ஒரு தமிழர் நடத்தி வருகின்றார். முன் காஞ்சி பச்சை யப்பர் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த திரு. மணி. கோடீஸ்வர முதலியார் அவர்கள் அங்கிருக்கும் மாபூப் கல்லூரி எனும் உயர்நிலைப் பள்ளியின் முதல்வராக இருந்தார். இப்பள்ளி முற்றும் தமிழரால் நிர்வகிக்கப் பெறுவது. அப்படியே பெண்களுக்கெனத் தனிப்பள்ளியும் (கீட்ஸ் பள்ளி) தமிழரால் , நிருவகிக்கப்பெறுகின்றது. இருபள்ளிகளுக்கும் நான் அடிக்கடி சென்று அங்குள்ள தமிழாசிரியர்களைக் கண்டுபேசி மாணவர்களுடன் கலந்து மகிழ்வேன். ஒரு பள்ளியின் தமிழாசிரியர் அண்ணாமலையில் என்னுடன் பயின்ற வட ஆர்க்காட்டைச் (முனுகப்பட்டு) சேர்ந்த திரு. இராசாபாதர் என்பவராவர். ஒய்வு பெற்றபின் அவர் தற்போது எண்பதைத் தாண்டிய நிலையில் சென்னை அயன் புரத்தில் தங்கி வாழ்ந்து வருகிறார். நான் அங்கே சென்றதன் நோக்கம்-அல்லது என்னை அனுப்பப்பெற்ற நோக்கம் அப்பல்கலைக்கழகத்தே தமிழில் 'டாக்டர் பட்டம் பெற வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும் என்பதே. அப்படியே மாணிக்கம் அவர்களும் செங்கைவேல் முருகன் அவர்களும் என்வழியே பதிவுசெய்து கொண்டார்கள். திரு. சிங்காரவேலு அவர்கள் பூனா பல்கலைக்கழகத்தே