பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 ஆனந்த முதல் ஆனந்த வரை என்னிடம் அன்புடன் பழகுவார், பல்கலைக்கழகத்திலேயே மொழியியல் துறையில் பணிபுரிந்த திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களும் ஆங்கிலத்துறையில் பணிபுரிந்த பரமேச்சுரன் அவர்களும் என் உற்ற நண்பர்களாயிருந்தனர். இவர்கள் இருவரும் நான் விட்டுவந்த பிறகும், அவர்கள் சென்னை வரும்போதெல்லாம் என்னை வந்து கண்டு அளவளாவிச் செல்வர். திரு. பரமேச்சுரன் அவர்தம் அன்னையார் நான் தனியாக இருந்தமையாலும் அவர்கள் வீடு எதிரில் இருந்தமை யாலும் பலகாரங்களை அடிக்கடி கொடுத்தனுப்புவார்கள், மற்றும் தெலுங்கு, மராத்தி, கன்னடம் பயிற்றும் ஆசிரியர் களும் என்னிடம் நன்கு கலந்து பழகினர். இவர்களுக் கெல்லாம் மேலாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர். D. S. செட்டி என்ற சதாசிவ செட்டியார் அவர்கள் என்னைப் பரிந்தேற்று அன்புகாட்டினார். அவர்தம் மாளிகைக்கு அழைத்து விருந்தளித்தார். பல்கலைக்கழகக் குழுக்கள் அனைத்திலும் என்னை உறுப்பினராக்கினார். பதவியை விட்டநிலையிலும் விடுமுறையில் நான் பயனுள்ள வகையில் செயலாற்ற, பல்கலைக்கழகமானியக்குழுவிடமிருந்து பயண நல்கை வாங்கித்தந்தார்கள். அதைப்பயன்படுத்தியே தமிழ் நாட்டின் கொங்கு நாட்டு எல்லை முற்றும் சுற்றி வந்து ஆங்காங்குள்ள மலைவாழ்மக்களின் வாழ்க்கைமுறைகளை எல்லாம் அறிந்து தெளிந்து மலைவாழ்மக்கள் மாண்பு என்ற நூலினையும் எழுதினேன். அதை அவர்களுக்கே உரிமையாக் கினேன். நான் விட்டுவந்தபோதும் ஒரு நல்ல சான்றிதழைத் தந்து எப்படியும் மறுமுறை வரவேண்டும் என வாழ்ததி அனுப்பினார்கள். பின் ஓரிருமுறை சென்றபோது, அவர் களைக் கண்டு மகிழ்ந்து வந்திருக்கிறேன். - நான் சென்ற அந்த ஆண்டு, இரெயில்வே அதிகாரம் சில மாற்றங்கள் செய்தது. மத்திய ரெயில்வே, தென் இந்திய இரயில்வே இரண்டும் பெரும் பிரிவுகளாக இருந்தன. எனவே