பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 337 அவற்றின்செயலைச் செம்மைப் படுத்த நினைத்து, எல்லை யைச்சுருக்கினர். மத்திய ரெயில்வேயிலிருந்தும் தென்ரெயில்வே யிலிருந்தும் சிற்சில பகுதிகளைப் பிரித்து, தென் மத்திய Qgu%)3%u (South Central Railway) stall's QLuluńL.G. giggir தலைமையிடமாகச் செக்கந்தராபாத்தினை அமைத்தனர். அதனால் சென்னையில் பணியாற்றிய பல அதிகாரிகள்தமிழர்கள் அங்கே வந்து சேர்ந்தனர். அவர்களும்-அவர் களுள் முக்கிய தலைவராகப் பொறுப்பேற்ற அந்தணாளரும் என்னைப் பலமுறை அவர்தம் குடியிருப்பிற்கு வரச்சொல்லி, பேசவைத்துப் பெருமைப்படுத்தினர். இப்படிப் பல்கலைக் கழகப் பணி அளவில் சிறியதாக அமையினும், அங்கிருந்த தமிழர் அனைவர் உள்ளத்திலும் ஒரு எழுச்சியினை உண்டு பண்ணினேன். இடையில் என் வேண்டுகோளுக்கு இணங்கி முதல்வர் பக்தவத்சலம் அவர்கள் என்பொருட்டே அங்குவந்து இரு இடங்களிலும் பேசியமை எனக்கு மேலும் பெருமை தந்தது. அங்கு அப்போது பிரம்மானந்த ரெட்டி முதல்வராக இருந்தார். அவர் பச்சையப்பரில் பயின்றவராதலால், நான் அங்கிருந்து வந்ததறிந்து, அவர்தம் தனி அலுவலர் மூலம் என்னிடம் பேசி, என்னை வரப் பணித்து, கலந்து விருந் தளித்து மகிழ்ந்தார். அப்படியே நான் இருந்த வீட்டிற்கருகே பின் முதல்வரான திரு சின்னாரெட்டியின் மாளிகை இருந்த மையின் அவரும் அவர்தம் அன்னையாரும் என்னை அவர்கள் வீட்டிற்கு வரச்சொல்லிப் பாராட்டினர். அவர்கள் தோட்டத்தில் விளையும் திராட்சைப் பழங்களை அவ்வப் போது எனக்குக் கொடுத்தனுப்புவார்கள். இன்னும் எத்தனையோ அன்பர்கள் நினைவுக்கு வருகிறார்கள்; பெயர்கள்தாம் நினைவில்லை. இதற்கிடையில் தமிழ்நாட்டு அரசியலில் பெரும்மாறுதல் ஏற்பட்டது. 1967 தொடக்கத்தில் தேர்தல் நடைபெற்றது. ஆ-22