பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 339 திரண்டு வரையில் (மாலைக் கல்லூரியைச் சேர்த்து) இருக்கப் பனித்தனர். நான் ஒய்வு பெற்றபின் அந்தப் பதவியும் இல்லையாயிற்று. நான் ஐதராபாத்தில் இருந்தபோது சில புதிய நிகழ்ச்சி களில் பங்கு கொள்ள மராட்டிய நாட்டிற்கும் உத்திர பிரதேசத்துக்கும் சென்றுள்ளேன். எங்குச் சென்றாலும் துணைவேந்தர் அவர்கள் பரிந்துரைத்து, அப்பணிகளை பல்கலைக்கழகப் பணியாகவே கருதி (On Duty) என்னை வழி அனுப்பி வைப்பார்கள். அக்காலத்தில் மூன்றாண்டுக்கு ஒருமுறை இந்தியப் பல் கலைக்கழகங்களிலுள்ள கீழ்த்திசை மொழி பயிற்றுவோர் lost BirG) (Oriental Conference) [560LGL10th, oligo soloin G) 1966-67இல் அம்மாநாடு உத்திரப்பிரதேசத்தில் (U.P.) உள்ள அலிகார் முசுலீம் பல்கலைக்கழகத்தே நடைபெற்றது. அதற்கு இந்தியநாட்டு ஒவ்வொரு பல்கலைக்கழகமும் பலமொழி பயிற்றும் பேராசிரியர்களைத் தத்தம் செலவில் அனுப்ப வேண்டும். உஸ்மானியாவில் தமிழ்,தெலுங்கு, இந்தி, மராத்தி, கன்னடம் ஆகிய மொழிகள் உள்ளன, எனவே அவற்றின் துறைத் தலைவர்கள் மாநாட்டுக்கு அனுப்பப்பெற்றனர். தில்லிக்குச் செல்லும் வழியில் ஆக்ராவில் இறங்கி வேறு இரயிலில் அலிகார் செல்லவேண்டும் என எண்ணுகிறேன். அப்படியே நாங்கள் ஐவரும் மாநாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றோம். தமிழ் நாட்டில் மதுரைப் பல்கலைக்கழகம் அப்போதுதான் தொடங்கப்பெற்றது. எனவே அதிலிருந்து யாரும் வரவில்லை என எண்ணுகிறேன். அண்ணாமலையி லிருந்து யாரும் வந்ததாக நினைவில்லை. சென்னைப் பல்கலைக் கழகத்திலிருந்து தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகியவற்றிற்கு டாக்டர் மு. வ. சங்கராசு நாயுடு. நாயர், மாரியப்பபட் ஆகியோர் வந்திருந்