பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 ஆனந்த முதல் ஆனந்த ೧೯೧೮ கொண்டேன். அச்சாலையில் தமிழ் நாட்டவர் ஒருவர் இருந்தார். உணவும் தமிழ் நாட்டு உண்வாகவே இருந்தது. சென்னையிலிருந்து தில்லி செல்லும் இரெயில்கள் இரவு ஏழு மணி 9 மணி என்ற அளவில் அங்கே வருவதால் அங்கே தமிழ் நாட்டு உணவு தயாரிப்பார்களாம், நானும் உணவு உண்டு இரவு பத்து மணிக்கு வரும் பம்பாய் வண்டியை எதிர்நோக்கி இருந்தேன். வண்டியும் வந்தது. நல்லவேளை எனக்கு ஒதுக்கிய இடமும் கிடைத்தது. ஏறிப் படுத்துக்கொண்டேன். காலை 7 மணிக்கு மாணிக்கப்பூர் என்ற விடத்தில் காலைச் சிற்றுண்டி நம் நாட்டு இட்டலி அங்கே இல்லை. அலகாபாத்தில் இருக்குமாம். அங்கே 11 மணிக்குத்தான் செல்லும். அப்போது உணவு வேளை. அங்கே தென்இந்திய உணவே கிடைக்கும் என்றனர். எனவே வெறும் பானம் மட்டும் மாணிக்கப்பூரில் அருந்தி, வாங்கிவைத்திருந்த கமலாவில் இரண்டு உண்டு அமைந்தேன். பகல் 11 மணி அளவில் அலகாபாத்தில் வண்டி நின்றது. தில்லிலியிலிருந்தும் பம்பாயிலிருந்தும் வரும் பல ரெயில்கள் கிழக்கே வாரணாசி, பாட்னா, கல்கத்தா போன்ற இடங் களுக்கு இங்கே வந்து செல்வதால் அது ஒரு நெருக்கமான இடமாக இருந்தது. கங்கையும் யமுனையும் சங்கமமாகும் அத் திரிவேணியை-அகன்ற பேராற்றை ரெயிலில் கடக்கும்போது கண்டேன். நல்ல பழங்களும் கிடைத்தன என எண்ணு கிறேன். பின் ரெயிலிலேயே உணவு கொண்டு வரச்சொல்லிச் சாப்பிட்டேன். காசிக்குப் பகல் 2.30க்குத்தான் செல்லும். கங்கை நதிப்புரத்துக் கவின் கண்டு கொண்டே நான் பயண மானேன். உடன் வந்த பயணிகள் ஆங்கிலத்தில் அவ்வவ் விடங்களைப்பற்றி விவரமாக விளக்கினார்கள். வழியில் ஒரிரு இடங்களில் வண்டி திடீரென நின்றது. ரயிலடி ஒன்றும் இல்லை. ஒருசிலர் இற்ங்கி நடந்து சென்றனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. உடன் வந்தவர் விளக்கினார்.