பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் . 351 எனவே இருமுறை நான் செல்ல வேண்டும். நான் மறுமுறை சென்றபோது அங்குள்ள பூனாநகர் சங்க அன்பர்கள், பூனாவில் மூவாயிரம் மாணவர் பயிலும் பள்ளி நடத்தும் தமிழர்கள் என்னைக் காண அலுவலகம் வந்தனர். அடுத்து வரும்போது அவர்கள் வீடுகளிலும் பள்ளியிலும் தங்கலாம் என்றும் தமிழ்ச் சங்கத்தில் பேச வேண்டுமென்றும் வேண்டு கோள் விடுத்தனர். அடுத்து நான் செல்லும் போதெல்லாம் அங்கு முக்கியமாக இருந்த வழுவூர்த்தம்பி என்பார் என்னை ரயிலடிக்கே வந்து அழைத்துச் செல்வார். மற்றொரு அன்பர் நல்ல நாடக ஆசிரியர்-நடிகர்-சபாபதி என்பார் என்னுடன் இரவு நேரங்களில் பேசிக் கொண்டிருப்பார். அவர்தாம் அப்பள்ளியின் தாளாளர். தமிழர் பெரும் பகுதியாக வாழும் அந்த இடம் சென்னையைப் போன்றே இருந்தது. அடுத்த கூட்டத்திற்கெல்லாம் ஐதராபாத்தினை விட்டு வந்தமையின் நான் சென்னையிலிருந்தே செல்ல வேண்டி இருந்தது. நான் ஐதராபாத்தில் தங்கி இருந்தபோது அங்கே பல இடங்களைச் சுற்றிப் பார்த்தேன். சார்மினார் பகுதியும் 'ஆபிட்ஸ்’ பகுதியும் செக்கந்திராபாத் பள்ளிகளும் ஐதராபாத்தில் நான் அடிக்கடி செல்லுமிடங்களாயின. அப்பொழுது நடந்த பொருட்காட்சியைக் கண்டு களித்தேன். நைசாம் மாளிகையினைக் கண்டேன். உந்து வண்டியில் இருநகரங்களைச் சுற்றியுள்ள கோல் கொண்டா போன்ற வரலாற்று இடங்களைக் கண்டேன். காணாதன ஒன்றும் இல்லை என்னுமாறு அன்பர்கள் எனக்கு உதவினர். கடைசி யில் பிரியும்போது பல்கலைக்கழக அன்பர்களும் பிற பொது மக்களும் ஆங்காங்கே கூட்டம் அமைத்து வாழ்த்து வழங்கி அனுப்பினர். துணைவேந்தர் திரு. ரெட்டி அவர்கள் மிசவும் வருந்தி, நீங்கள் தொடர்ந்து இங்கேயே இருப்பீர்களென நம்பினேன். அடிக்கடி வாருங்கள்’ என வாழ்த்தி அனுப்பினார். நல்ல சான்றிதழும் தந்தார். நானும் அடுத்து