பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 ஆனந்த முதல் ஆனந்த வரை இரண்டு மூன்று முறை சென்றபோதும் அவரை அவர் விட்டில் கண்டேன். அப்போது அவர்கள் ஒய்வு பெற்றிருந் தார்கள். அவர் பெயராலேயே அமைந்த சதாசிவ நகரில் தனிக்குடில் அமைத்து ஓய்வு நாளை அமைதியாகக் கழித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒன்றிய சென்னை மாகாணத் தின் கல்வித்துறையில் துணை இயக்குநராக இங்கே பணி யாற்றியவர். ஆந்திர மாநிலம் பிரிந்தபோது, அந்த மாநிலத் திற்கு விரும்பிச் சென்றவராவர். இவ்வாறு நான் பச்சையப்பரில் இருந்தபோது பல்கலைக் கழகத்தால் தெற்கே மதுரைக்கும் மாநில அரசால் வடக்கே ஐதராபாத்திற்கும் அனுப்பப் பெற்றேன். இரண்டிடங் களிலும் ஒவ்வோராண்டு கழிய, மற்றைய முப்பது ஆண்டுகள் (1944-76) பச்சையப்பரிலேயே கழித்தேன். முதல் முறை மதுரை செல்லும்போது துணைப் பேராசிரியராக இருந்தேன். தொல்லை இல்லாமல் வந்து சேர்ந்தேன். ஆயினும் ஐதராபாத்திற்குச் சென்றபோது துறைத்தலை வனாக இருந்தேன். நான் சென்றதால் அப்பதவிக்கு உயர்த் தப்பட்ட ஒருவரும் துணைப் பேராசிரியராக இருந்து பேராசிரி யராக உயர்த்தப் பெற்ற ஒருவரும் நான் திரும்பிவராத வகைக்கு முயன்றனர். அங்குள்ள துணைவேந்தருக்கும் மற்ற வர்க்கும் என்னை அங்கேயே நிறுத்திக் கொள்ளுமாறு கடிதம் எழுதியதாகக் கூறினர். இங்கே திரும்பிச் சேராதிருக்க வழி உண்டா என ஆய்ந்திருப்பர். ஆயினும் அந்த ஆண்டு பச்சை யப்பன் அறநிலையத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த திரு. டாக்டர் வேணுகோபால் அவர்கள் - டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் மகனார், என்னை மே மாதமே சேரச் செய்தார். அத்துடன் புதிதாக அந்த ஆண்டு அவர் ஆணை வழி திறக்கப்பெற்ற காஞ்சி, கடலூர் கல்லூரிகள் சென்னை கந்தசாமிக் கல்லூரி ஆகியவற்றிற்குத் தமிழாசிரியர் களைத் தேர்ந்தெடுக்கும்போது அறநிலை உறுப்பினரோடு