பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 353 என்னையும் இருக்க வைத்து என் கருத்தினைக் கேட்டே வந்தவர்களுள் தக்கவரைத் தேர்ந்தெடுத்தனர். பிற் அற்நிலைய உறுப்பினர்களும் முதல்வரும் என் வருண்க அறிந்து மகிழ்ந்தார்கள். தமிழ்நாட்டு அரசியலிலும் மாறுபாடு ஏற்பட்டதை முன்னரே குறித்தேன். அன்றைய முதலமைச்சர் அண்ண்ா அவர்களையும் என்னை அனுப்பி வைத்த முந்தைய முதல் மைச்சர் பக்தவத்சலம் அவர்களையும் கண்டு, அவர்கள் வாழ்த்தையும் பெற்று, மீண்டும் பச்சையப்பரில் பழையபடி என் பணியினைத் தொடங்கினேன். பிற்கு ஒய்வு பெறும் வரையில்-1976 வரையில் அறுபத்திரண்டு வயது வரையில் நான் வேறு எங்கும் வெளியூர் செல்லவில்லை. அத்துடன் 1968லே என் அன்னையின் பெயரால் அறம் அமைத்துப் பள்ளியும் தொடங்கிவிட்டமையின் அந்தப் பணியும் சேர்ந்து என்னை எந்தப் பகுதியும் செல்லவிடாது தடுத்து நிறுத்தின். 1971இல் டாக்டர் மு.வ. அவர்கள் மறைந்த பின்பு மதுரைத் துண்ைவேந்தர் நான் எனவே அங்குள்ள சில பத்திரிகைகள் வெளியிட்ட பேர்திலும் அமைச்சர்களிடமும் அந்த எண்ணம் இருந்த போதிலும், நான் உள்ளதே அமையுமென்றிருந்து பச்சையப்பர் பணியினையும் வள்ளியம்மாள் கல்வி அறப்பணி |யினையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தேன். 5. மலேயா 1948 ஏப்பிரல் மாதம் ஒரு நாள் காலையில் என் வீட்டிற்கு மாண்புமிகு அமைச்சர் பக்தவத்சலம் அவர்கள் என்ன்ன உடனே வரச் சொன்னார்கள் என்ற செய்தி வந்தது. உடன் காலை 8.30க்கு அங்கே சென்றேன். அவர்கள் உடனே ஆ-23