பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 ஆனந்த முதல் ஆனந்த வரை 'இன்னும் ஒரு வாரத்தில் நீங்கள் மலேயா செல்ல வேண்டி யிருக்கும் தயாராக இருங்கள்; பிற ஏற்பாடுகளெல்லாம் நாங்கள் பார்த்துச் செய்கிறோம் என்றார்கள், காரணம் பிறகு சொன்னார்கள். மற்றவர்கள் வழியே கேட்டறிந்தேன். மலேயாவில் பல்கலைக்கழகம் புதிதாக அமைக்கப் போகிறார் களாம். அங்கே இந்தியர்-சிறப்பாகத் தமிழர்கள் அதிக மாக உள்ளமையின் இந்திய மொழி ஒன்றினை அப் பல்கலைக் கழகத்தில் அமைக்க ஏற்பாடாம். ஆகவே எந்த மொழியை வைக்கலாம் எனக் கண்டறிய, இந்திய அரசாங்கவழி முன்பே ஒரு பெரியவர் அனுப்பப்பெற்றார் என்றும் அவர் சென்று வந்து வடமொழியே வைக்க வேண்டும் என்று பரிந்துரைத் தார் என்றும் கூறினர். அன்று இந்திய அரசின் முதல் அமைச்சராக இருந்த நேரு அவர்கள் அக்கூற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. அங்கே பெரும்பாலோர் தமிழர்களே ஆதலால் அதுபற்றித் தமிழகத்தின் கருத்தை அறிய விரும்பி, அன்றைய முதல்வர் ஓமந்துாராரைக் கேட்டுள்ளார். அவர்கள் திரு. பக்தவத்சலம் அவர்களோடு கலந்து என்னை அனுப்ப முடிவு செய்ததாக அறிந்தேன். ஏற்கனவே அங்கே இருந்த மலேயா தமிழ்ச் சங்கத்தார் எனை வருக என அழைத் திருந்தனர். எனவே ஒரே பயணத்தில் இருவர் தம் விருப்பத்தினையும் நிறைவேற்றலாம் என எண்ணிச் செல்ல இசைந்தேன். 姆 பயணத்திற்கு வேண்டி விசா முதலியவற்றை அரசாங்கமே ஏற்பாடு செய்தது. அப்போது அங்கே இந்தியத் தூதுவராக திரு. ஜான் திவி என்ற தமிழ் நலம் சான்ற குடும்பத்தைச் சார்ந்தவர் சிங்கப்பூரிலும் திரு. நடராஜப் பிள்ளை அவர்கள் கோலாலம்பூரிலும் இருந்தனர். அவர்கள் மூலம் அங்கிருந்தும் விசா வந்தது. இங்கே அரசாங்கமும் முன்னின்று வாங்கித் தந்தது. முன்னவனே முன்னின்றால் முடியாத பொருள் உளதோ அப்போது