பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 ஆனந்த முதல் ஆனந்த வரை அதிகாரி ஒருவர் வந்து வரவேற்றார். மலேயா தமிழ்ச் சங்கச் செயலாளர் அருணாசலம் செட்டியார் அவர்கள், நிகழ்ச்சி முறையில் சிங்கப்பூரினைக் கடைசியாகக் குறித் திருந்தார். எனவே சிங்கப்பூர் கப்பல் துறையில் அச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் தூதரக அதிகாரியும் பிறரும் வந்திருந்தனர். அவர்கள் ஆற்றுப்படுத்த நான் நேராக மலாக்காவிற்குப் புறப்பட்டேன். - ஒன்றரை மாதங்கள் மலேயா, சிங்கப்பூரில் தங்கிப் பலப் பல ஊர்களைக் கண்டு, (மலேயாவின் ஒன்பது மாநிலங்கள்கீழ்மாநிலங்கள் இரண்டைத் தவிர்த்து-அங்கு தமிழர் அதிகம் இல்லை) வாரத்துக்கு ஒருமுறை தமிழக அமைச்சர் அவர்களுக்குக் கடிதம் எழுதி அனுப்பினேன். சிங்கப்பூர் தமிழ் முரசு’ம் கோலாலம்பூர் தமிழ் நேசனும் (இரண்டும் தினசரிகள்) என் பயணத்தை முறைப்படி நாள்தோறும் வெளியிட்டன. நான் பலவிடங்களைப் பார்த்துத் தெரிந்து தமிழே மலேயாப் பல்கலைக்கழகத்தில் வைக்கத் தகுதி பெற்றது என்ற திட்டமான முடிவை எழுதினேன்; வந்த பிறரும் நேரில் விளக்கிக்கூறினேன். ஆம்! அடுத்து அங்கே பல்கலைக்கழகம் தொடங்கப்பெற்றபோது இந்திய மொழித் துறை என்ற பிரிவினை அமைத்து, அதில் தமிழையே இடம் புெறச் செய்தனர். இதையே நான் 1985இல் மலேயா சென்றபோது, கோலாலம்பூர் தமிழ் நேசன் (11-7-1985) மலேயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பிரிவு அவசியம் என்று வலியுறுத்திய பேராசிரியர் பரமசிவானந்தம் வருகை' என்று என் படத்துடன் மூன்று பத்தித் தலைப்பிட்டு என் வாழ்வையும் பிறவற்றையும் தெளிவாக எழுதி வெளி யிட்டது. எனவே என் மலேயா பயணம் பயன் தந்தது என மகிழ்ந்தேன். பிற நிகழ்ச்சிகளுள் ஒரு சிலவற்றைக் குறிக்க நினைக்கிறேன்.