பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 357 என்னுடைய முதல் பணி மலாக்காவில் தொடங்கிற்று. பின் பல ஊர்களைக் கண்டேன். கோலாலம்பூரில் ஒரு வாரம் தங்கினேன். பினாங்கில் நான்கு நாள்; சிங்கப்பூரில் நான்கு நாள். பிற ஊர்கள் ஒவ்வொரு நாள் என ஒன்றரை மாதம் நாடு முழுதும் சுற்றினேன். மலாக்காவில் மூன்று நாள் தங்கியபோது, அது அந்நாட்டின் மிகப் பழைய ஊர் என்பதையும் அங்குள்ள குன்றின் மேல் உயர் தளத்தில்தான் சமயம் பரப்ப வந்து தூய சேவியர் அடக்கமானார் என்றும் பின் அவர்தம் பொன்னுடலை இந்தியாவுக்குக் கொண்டு சென்றார்கள் என்றும் கேட்டறிந்தேன். அந்த வெற்றிட மான ஆழ்ந்த பள்ளத்தினைக் கண்டபோது, உளம் நைந்தேன். எங்கோ பிறந்து இறைவன் திருத் தொண்டே வாழ்க்கையாகக் கொண்டு, அல்லும் பகலும் அயராது உழைத்து, நாடுவிட்டு நாடு, ஊர் விட்டு ஊர் உலகெங்கணும் சுற்றி, இறைவன் புகழ் பாடி அவன் அருள் பரப்பி வாழ்ந்த ஒரு நல்லவர் மறைய, அடக்கம் செய்யப்பெற்ற இடம் கண்ட போது, இத்தகைய நல்லவர்களன்றோ உலக முழுதும் அவர் தம் சமயம் பரவிற்று எனப் போற்றினேன். வாயிலை விட்டு இறங்காது, வந்தால் 'பிரசாதம் வழங்கும் நம் நாட்டுத் துறவியர் அந்த நிலைவிட்டு, இவ்வாறு சமயத்தொண்டு செய்வார்களாயின் பல உண்மைகளை உள்ளடக்கிய, எல்லாச் சமயங்களையும் ஏற்றுக்கொள்ளும் மெய்ச்சமயமாகிய சைவம் எப்படி உலகில் வளர்ந்தோங்கும் என எண்ணினேன். தென்னாட்டில் சிறந்த சித்தாந்த சமயம் இத்தகைய நற்றொண்டர் இல்லாமையால் நலிந்து வருவதை நினைந்து வருந்தினேன். எதுவரினும் வருக அலது எது போயினும் போக, உனது இண்ையடிகள் மறவாதபேறொன்று மாத்திரம் எனக் கடைதல் வேண்டும் அரசே என்ற இராமலிங்க அடி களாகிய சமரச ஞானியின வாக்கு என் நினைவுக்கும்வந்தது. ஆம்! என் மலேயாச் சொற்பொழிவுகளில் வள்ளலார் பற்றியும் அவர்தம் பாடல்கள் பற்றிய பேச்சும் இருந்தன.