பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 359 யாழ்பாணத் தமிழரில் உயர்நிலையிலுள்ள சிலர் என் சொற்பொழிவினைக் கேட்டனர். அவர்தம் இல்லங்களில் விருந்து அளித்தனர். அனைவரும் நல்லவராகவும் பண்புள்ள வராகவும்இருந்தனர். எனினும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் அவர்களுக்கும் அவ்வளவு தொடர்பு இல்லை. அந்நாட்டு மலாய் மக்கள் நம் தமிழரைக் காட்டிலும் அவர்களை அன்புடன் போற்றி ஏற்றனர்,காரணம் ஒன்றே.நம் தமிழர்கள் எத்தனை செல்வம் பெறினும் அதனை உடனே தாய் நாட்டிற்கு அனுப்புவதிலே கண்ணும் கருத்துமாயிருந்தனர். ஆனால் யாழ்ப்பாணத்தார் அதையே தாயகமாகக் கொண்டு, பெற்றதை அங்கே வைத்துக் கொண்டு வாழ்ந்தனர். அதனாலேதான் பிறகு நாட்டைவிட்டுச் செல்ல நேர்ந்த நிலையிலும் அவர்கள் தாய்நாடு செல்லாது இலண்டனை நாடிச் சென்றனர். நான் 1985இல் இலண்டன் சென்றபோது பல யாழ்ப்பாணத் தமிழர் இல்லங்களுக்குச் சென்று விருந் துண்டு அவர்களை வாழ்த்தி வந்திருக்கிறேன். மலாய் நாட்டு மக்களைப் பற்றியும் சிறிது சொல்ல வேண்டும். மலாய் மொழி எனும் எழுத்தற்ற மொழியே அந்நாட்டு மொழியாகும். இன்று அவர்தம் மொழிக்கு எழுத்துக்கள் வழங்கப்பெற்றுப் பள்ளிகளில் பயன்படுத்தப் பெறுகின்றது என்பர். அம்மொழிக்கென தனியாக இயக்ககம் மலேயாவிலும் சிங்கப்பூரிலும் உள்ளது. ஏன்? நம் தமிழ்மொழிக்கும் கூடத் தனியாக இயக்ககம் உண்டு. ஆம்! நான் என் பயண நூலில் கூறியபடி நன்றி கெட்ட தமிழகம்’ தன் தாய்மொழியாம் தமிழைக் கொலை செய்தாலும் மலேயா, அமெரிக்கா போன்ற நாடுகளில் அத்தெய்வத் தமிழ் வாழும் என்பது உறுதி. - நான் சென்ற அந்நாளில் (1948) மலாய் நாட்டு மக்கள் . பெரும்பாலும் காடுகளில் வேட்டையாடினர். 'எங்கோ ஒரு