பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 363 பின் அந்நாட்டு அமைச்சராக இருந்த தமிழர் சம்பந்தம் என்பவர் இருந்தார். அவரும் அவர் தம்பிகளும் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள். அன்போடு பழகினார். பின்னும் வேறு சில ஊர்களைக் கண்டு ஈப்போ' என்னும் நகரை அடைந்தோம். ஆம்! எல்லா இடங்களுக்கும் திரு. அருணாசலம் செட்டியார் அவர்கள் தம் குடும்பத்துட னேயே வந்தார். எல்லாப் பயணங்களும் கார் வழியே நடைபெற்றன. மலேயாவில் முக்கிய பொருள் ரப்பர். வழிநெடுகக் காடு களில் ரப்பர் மரங்களில் ரப்பர் எடுக்கும் மக்களைக் கண்டு பேசினேன். அவர்கள் அனைவரும் தமிழர்களே. ஏன்? மலேயாவை வளமான நாடாக்கியவர்களே தமிழர்கள்தாம். இன்று சீனர்கள் அதிகமாக உள்ளாரேனும் ஒரு காலத்தில் மலேயா மற்றொரு தமிழ் நாடாகவே இருந்தது. ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் மிக வறுமையான நிலையில் இருந்தனர். தோட்ட முதலாளிகள் அவர்கள் தங்க அறைகள் கட்டி, பள்ளிக்கூடங்கள் வைத்து, பிற ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். என்றாலும் அவர்கள். வாழ்க்கைத் தரம் மிகக் குறைவாகவே இருந்தது. பாரதியார் தேயிலைத் தோட்டத்தே நம்மக்கள் நைகின்ற நிலையில் பாடிய பாடல் ஒப்ப இன்றேனும் அவர்கள் வாழ்க்கைத் தரம் உயர முதலாளிகள் இன்னும் பல செய்ய வேண்டும் என எண்ணி னேன். சில முதலாளிகளிடமும் சொன்னேன். அங்குள்ள பள்ளிகளிலெல்லாம், பெரும்பாலும் தமிழர்களே அங்கே இருந்தமையின், தமிழே பாடமாக-பயிற்று மொழியாக இருந்தது. அவர்கள் நிலை என்று உயருமோ என்ற எண்ணத் துடனேயே என் பயணத்தைத் தொடங்கினேன். . ஈப்போ' அழகான ஊர்-துய்மையானதும் கூட. நான் மலேயாவில் கண்ட ஊர்களில் இது போன்ற தூய்மையான ஊரைக் கண்டதில்லை. அங்கே ஈப்போ தமிழ்ச் சங்கம்