பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 367 (112 கி. மீட்டர்) தொலைவில் உள்ள சிற்றுாரில் பணியாற்று கிறேன். உங்களைக் காணவே இங்கே வந்தேன். உங்கள் பேச்சினைக் கேட்டதில் பெரிதும் மகிழ்ந்தேன் என்று வாழ்த்தினர். பழங்காலத்திய பச்சையப்பரில் பயின்ற மாணவர்தம் பண்பாட்டினையும் பயின்ற கல்லூரியிடம் கொண்ட பாசத்தினையும் அறிந்து எண்ணி எண்ணி வியந் தேன். அவரை வாழ்த்தி அனுப்பிவைத்தேன். அடுத்து அங்கே வந்த ஒருவர் அருகில் உள்ள தம் கடைக்கு என்னை வருமாறு அழைத்தார். செட்டியாரும் கூடவே இருந்தார். சென்றோம். அது "Shop என்று சொல்லும் பல பொருள் விற்பனைக் கடை. எங்களை உட்காரவைத்துவிட்டு, உள் சென்று அவர் நல்ல கைக்கெடிகாரத்தைக் கொண்டு வந்து என்கையில் கட்டினார். நான் வரும்போது சிங்கப்பூரிலிருந்து ஒரு கடியாரம் வாங்கி வரலாம் என்று எண்ணி இருந்தேன். வெறுங்கையைக் கண்ட அவர் என்ன நினைத்தாரோ-அவர் கடையிலிருந்த நல்ல கடியாரம் ஒன்றினை எடுத்து என் கையில் கட்டினார். கூடவே வந்த செட்டியார் அதன் விலை என்னவென்று கேட்டார். அவர் சிரித்துக் கொண்டு ..இவருக்கு என் அன்புப் பரிசு அன்பிற்கு விலை ஏது?’ என்று பதில் கேள்வி கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அவர் மேலும் இது என் சொந்தக் கடை. இது வரையில் இங்கே இவ்வளவு அழகாகத் தமிழ் பேசித் தமிழை விளக்கித் தமிழர்களை மகிழ்வித்தவர் யாருமில்லை, நான் ஒரு தமிழன். எனவே மகிழ்ந்தளித்தேன்’ என்றார். இத்தகைய நல்லவர்கள் ஒரு சிலராவது உள்ளமையினால் தான் தமிழ் இன்றளவும் வாழ்கிறது என்ற எண்ணத்தோடு அவரை வணங்கி விடைபெற்றேன். அதைச் சுமார் நாற்பது வருடங்கள் கட்டியிருந்தேன். 1985இல் நியுயார்க்கில் ஒரு புதுக் கடியாரம் வாங்கிய பொழுதே அதை மாற்றினேன். அதையும் எங்கள் பள்ளியின் காட்சிச் சாலையில் ஒரு காட்சிப் பொருளாகவே வைத்துள்ளேன்.