பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் கினைவுகள் as வரை அந்த நிலம் யார் யார் கையிலோ மாறி மாறிப் பயிரிடப் பெற்றுக் குத்தகை நெல்லை மட்டும் நாங்கள் கொள்ளும் வகையில் அமைத்து விட்டது. எனக்குத் தற்போது இளமையில் நிலங்களைச் சுற்றிப் பார்த்தமையில் பலவிடங்களில் உள்ள வயல்கள் தெரியும். என்றாலும் பயிரிடத் தெரியாது. என் மகனுக்கோ ஊரில் உள்ள நிலங் களே தெரியாது. ஊருக்குச் செல்லக்கூட அவனுக்கு விருப்ப மில்லை. இப்படிக் கிராமந்தோறும் வளம் பெருக்கி உழவுத் தொழில் செய்திருந்த மக்கள் பலர் நிலங்களைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நகர வாழ்வை நாடி வருவது மிகச் சாதாரண மான ஒன்றாகிவிட்டது. அம்மா அவர்கள் அடிக்கடி என்னை அருகழைத்துப் புத்திமதி சொல்லுவார்கள். அப்பா சில நாட்கள் வீட்டுக்குக்கூட வரமாட்டார். என்னை எங்காவது வழியில் கண்டால் சாப்பிட ஏதாவது மிட்டாய்', "பிஸ்கோத்து கொடுப்பார். அதை வாங்கினது தெரிந்தாலோ அம்மா அடிப்பார்கள். அப்பா என்னைப் பொறுத்த வரையில், என்னை ஒன்றும் செய்யாததால், நல்லவர் என்னுமாறே இருந்தார். அதற்கு நேர்மாறாக, நான் செய்த தவறுகளுக்கெல்லாம் அம்மா அடித்துத் தண்டிப்பார். ஆதலால் சில நாட்கள் அவர்கள் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வரும். என்றாலும் அவர்கள் என் வளர்ச்சியிலும் படிப்பிலும் கொண்ட அக்கறையினைச் சில வேளை எண்ணும்போது அந்தச் சிறுவயதிலேயே பூரிப்பேன். இன்று பெரியவனான பிறகு அம்மாவைத் தெய்வமாகவே கொண்டாட வேண்டிய நிலையில் உள்ளேன். கொண்டாடுகிறேன். அவர்கள் அடித்த ஒவ்வொரு அடியும் என்னை வாழ்வுப் பாதையில் ஒரோர் படி முன்னேற வைத்தது என்னலாம், இவ்வாறெல்லாம் என்னைப் படிக்கவைத்த அன்னையார் பின் நான் மேல் வகுப்பிற்குச் செங்கற்பட்டுக்குச் செல்ல நினைத்தபோது அன்பின் காரணமாக என் படிப்பைத்