பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 - ஆனந்த முதல் ஆனந்த வரை அடைவது, அல்லது மத்திய அரசின் கீழ் கொண்டுவருவது என்று பலவகையில் மாண்புமிகு பிரகாசம் உட்படப் பல தலைவர்கள் வற்புறுத்தினர். இதற்காக பொட்டி பூரீராமுலு என்பவர் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். எனினும் அவர்கள் வேண்டுகோளை இந்திய அரசு ஏற்றுக் கொள்ள, வில்லை. நான் தமிழ்க்கலையில் தொடர்ந்து திருப்பதிமுதல் சென்னைவரையில் ஊர் ஊராக மக்கள்தொகை-மொழி பற்றி கட்டுரைகள் பல திங்கள் எழுதி வெளியிட்டேன். 1931இல் தான் மொழிவாரி மக்கள்தொகை எடுக்கப்பெற்றது. எனவே அந்த அடிப்படையில் வெளியிட்டேன். பிறகு 1941இல் மொழி வாரி இல்லை. என்னுடைய கணக்கும், படங்களும் பிற குறிப்புகளும் முதல்வர் இராஜாஜி அவர்களுக்குப் பெரிதும் பயன்பட்டன என அன்று பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு பக்தவத்சலம் அவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள். இன்றைய மராட்டிய மாநில ஆளுநர், அன்றைய சென்னை மாநிலக் கல்வி நிதி அமைச்சர் மாண்புமிகு சுப்பிரமணியம் அவர்களும் அவைபற்றிப் பாராட்டி, தேவையான இடங்களில் அவற்றைப் பயன்படுத் தினார்கள், எனவே இராமருக்கு அணில் பணி செய்தமை போன்றுஎன் தமிழ்க்கலையின் சிறு பணியும் தமிழ்நாடு நலம் பெற உதவிற்று என அறிந்து மகிழ்ந்தேன். சித்தாந்தம் இதழில் துணையாசிரியராக இருந்தேன் எனக் குறித்தேன். ஆம்! அக்காலத்திலெல்லாம் நான் சைவ 'சித்தாந்த சமாசத்தில் நெருக்கமாக ஈடுபட்டேன். 1934 டிசம்பரில் திருவதிகையில் திரு. வி.க. தலைமையில் சைவ சித்தாந்த சமாசம் நடைபெற்றது. அப்போது செயலாள ராக இருந்த பாலசுப்பிரமணிய முதலியார் அவர்கள் அதைச் சிறப்புற நடத்தினார்கள். அவர்தம் வாழ்வே சமாசம் என அமைந்தது. 150 கோவிந்தப்பநாயக்கன் தெரு அவரது இல்லம்; சமாச அலுவலகமும் அதுவே. அவர் காலத்தில்