பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 ஆனந்த முதல் ஆனந்த வரை செல்வர்கள் கூட்டுறவு இயக்கத்துக்கெனவே வாழ்ந்தனர். மாவட்டந்தோறும் தக்கவர்கள் தலைமையேற்று கூட்டுறவு இயக்கத்தையும் அதன்வழி இயங்கிய வங்கிகளையும் திறம்பட நடத்தினர். அன்றைய சென்னை மாநிலத்தை ஜஸ்டிஸ்' கட்சி ஆண்டபோது (1925-31 இருக்கலாம்) கூட்டுறவும் இந்துசமய அறநிலையமும் அமைக்கப்பெற்றன. மக்கள் நலமும் சமய நெறியும் நன்கு போற்றிப் பாதுகாக்கப்பெற்றன. கூட்டுறவு இயக்கத்தை நன்கு வளர்த்தவர்களுள் முக்கிய மானவர் கீழைச்சேரி திவான்பகதூர் தெய்வசிகாமணி முதலியார் ஆவார்கள். மாநில அளவில் பல பெரியவர்கள் பங்கு கொண்டு திறம்பட நடத்தினர். நான் சென்னை வந்து வாழ்ந்தபோது அதற்கெனத் தனி இடம் ஒன்றும் அமைக்கப் பெற்றது. கோட்டைக்குப் பின்புறவாயிலுக்கு எதிரே மவுண்டுரோடு தொடக்கத்தே ஐந்து மாடிக்கட்டடமாக இன்றும் அது காட்சி அளிக்கின்றது. அதன் அமைப்பிலும் வளர்ச்சியிலும் அன்று சிதம்பரம் கனகசபைப் பிள்ளை, பின்னலூர் வாகீசம்பிள்ளை, ஈரோடு வேங்கிடசாமிநாயகர், கோவை பழநியப்ப முதலியார் போன்றவர்கள் முக்கிய பங்காற்றினர், செங்கற்பட்டு வேதாசலமுதலியார், திருச்சி தேவர், தஞ்சை நாடிமுத்துப் பிள்ளை, வடஆர்க்காடு கலவை சிங்காரவேலு முதலியார், வடநாங்கூர் மாணிக்கமுதலியார், தென்னார்க்காடு ரெட்டியார் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்கள் அக்காலத்தில் கூட்டுறவு என்னும் மாத இதழினையும் நடத்தினர். தமிழ்நாட்டு எல்லாக் கிளைகளுக்கும் அது அனுப்பப் பெற்றது. மேலும் சங்கச் செய்திகள் மட்டுமன்றி, கூட்டுறவு பற்றிச் சிறந்த கட்டுரைகளும் அதில் இடம் பெற்றன. அத்தகைய இதழினைப் பொறுப்பேற்று நடத்த ஒர் அலுவலர் அவர்கள் நிலையத்தில் இருந்தாரேனும் 'அதற்கென ஓர் ஆசிரியர் குழுவும் அமைத்தனர். என்னை