பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

373 ஆனந்த முதல் ஆனந்த வரை. முக்கியமான இராசா. சர். முத்தைய செட்டியார் அவர்களை அழைத்து, எனக்கு இசைவு தருமாறு சொல்லி (எழுத்தில் அன்று) பிற்பகலில் எனக்குப் பாடம் இல்லாவகையிலும் கல்லூரியில் ஏற்பாடு செய்யச் சொன்னார்கள். அப்போது இராஜாஜி முதல்வராக இருந்தார்கள். (காங்கிரஸ் பெரும் பான்மை இழக்க, அதைச் சரி செய்யவும் காங்கிரசில் இணைப்பினை நிலைநாட்டவும் அவர் தேர்தலில் போட்டி யிட்டு வெற்றி பெறாநிலையிலும் கர்மராசர் அவர்கள் அவர் களை வலிய அழைத்து அமைச்சரவை அமைக்குமாறு வேண்டினார். அவரும் அப்பொறுப்ப்ை ஏற்றுத் திறம்படச் செயலாற்றியதோடு, மாநிலப் பிரிவின்போது சென்னை யினைத் தமிழ்நாட்டுக்கே உரியதான ஒருபெரும் செயலைச் செய்து வெற்றி கண்டார்). யார் ஆளினும் அவர்களுக்கு ஆவன செய்யும் ராசா. சர் அவர்களும் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றினார். எனக்குப் பகல் ஒருமணியொடு கல்லூரிப் பணி முடிவடையும். உடன் (மவுண்டுரோடு-இன்றைய காஸ்மாபாலிடன் கிளப்புக்குப் பின்புறம்-இன்று அங்கிருந்து ஒரு நாளிதழ் வருகின்றது என நினைக்கிறேன்) பாரததேவி அலுலகம் சென்று கணக்குகளையெல்லாம் கண்டு முடித்து ஐந்து மணிக்கு அலுவலர்கள் சென்றபின்பு, இதழ் பற்றிக் கருத்திருத்துவேன். அனைத்தையும் செம்மை செய்து முடிக்க இரவு 9 அல்லது 10 மணி கூட ஆகலாம். பிறகு அலுவலக உந்துவண்டியிலேயே (Car) என் வீட்டிற்குக் கொண்டு வந்து விடப்பெறுவேன். இவ்வாறு திரு. பக்தவத்சலம் அவர் களுடன் இணைந்து பாரததேவியினை ஒரு சில மாதங்கள் நடத்தினேன். ஒருநாள் திடீரெனப் பக்தவத்சலம் அவர்கள் என்னை அழைத்து இனி நீ பொறுப்போடு இதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். நாளையிலிருந்து நான் வரமாட்டேன்’ என்று கூறினார். அவர்கள் தினந்தோறும் காலை 10 அல்லது