பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 379 11 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 வரை இருந்து எல்லா வற்றையும் கவனித்துச் செல்வார்கள். அப்போது பண நெருக்கடி அதற்கு அதிகமாக இருந்தமையின் பலரிடம் சென்று (நானும் 'உடன் செல்வேன்). அதற்கும் பங்கு பெற (share) ஏற்பாடு செய்வார்கள். அத்தகையவர் இவ்வாறு சொன்னதும் எனக்கு வியப்பாக இருந்தது. அவர்களிடம் அதுபற்றிக் கேட்பதற்கு முன், அவர்கள் அலுவலகத்துப் படி களில் இறங்கிக் கொண்டிருந்தனர். திரு. இராமகிருஷ்ண ஐயர் அவர்களும் அப்போது வரவில்லை. நான் ஏன் அவர் அவ்வாறு கூறினார்? நான் மேல் என்ன செய்ய வேண்டும்? என என் அறையில் அமர்ந்து நெடிது நினைத்திருந்த அதே வேளையில் பி.டி.ஐ யில் அதுவரையில் வந்த செய்தியினைத் துண்டித்துத் துணை ஆசிரியர் ஒருவர் என்னிட்ம் கொண்டு வந்தார். அதைக் கண்டேன். முதலிலேயே ஒரு முக்கிய செய்தி இருந்தது. இராஜாஜி அவர்கள் தம் அமைச்சர் அவையை விரிவுபடுத்தி, மாண்புமிகு பக்தவத்சலம், திருமங்கலம் இராசாராம், திருமதி. சோதி வெங்கடாசலம் ஆகிய மூவரை யும் அமைச்சர் அவையில் இணைத்துக் கொண்டார்) என்ற செய்தியே அது. நான் மகிழ்ந்தேன். இதற்காகத்தான் அவர்கள் அப்படிச் சொன்னார்கள் என்பது புரிந்தது. உடன் வந்த திரு. இராமகிருஷ்ண ஐயர் அவர்களும் செய்தியைச் சொல்லி, இனி நான் அதிகப் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். பின் பொருளா தார நெருக்கடியால் அந்த நிறுவனமே மூடப்பட்டது. நான் அதன் வளர்ச்சிக்கெனத் தந்த தொகையினையும் பின் பெற விரும்பவில்லை. பங்காளர்களாகச் சேர்ந்தவர்களுக்கு ஒரளவு விற்ற தொகை பகிர்ந்து அளிக்கப் பெற்றது. பின் திரு. பக்தவத்சலம் அவர்கள், 1967க்குப் பிறகு, திரு. ராஜம் அவர்கள் சுதேசமித்திரனைப் பொறுப்பேற்று நடத்திய காலை, அதன் ஆசிரியராக அமர்ந்து தொண்டாற்