பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 - ஆனந்த முதல் ஆனந்த வரை வார்கள். இன்று அப்பள்ளி பல கட்டடங்கள் உடையதாய், அறிவியல் ஆய்வுக் களங்கள், கணிப்பொறி போன்றவை உடையதாய் மாவட்டத்தில் நல்ல பள்ளிகளுள் ஒன்றாக உள்ளது என்பதை அறிய மகிழ்ச்சி பிறக்கிறது. இதுவன்றி, நான் பயின்ற இந்துமத பாடசாலை விழாக் களில் நான் தவறாது கலந்து கொள்வேன். அப்பா அவர்கள் சென்னையிலிருந்து விழாவிற்கு அழைத்து வரும் பொறுப்பை யும் அவர்களுக்கு வரவேற்புக்கென இதழ் (பாட்டில்அப்போது நான் பல பாடல்கள் எழுதியுள்ளேன்) தயாரிக்கும் பொறுப்பையும் என்னிடம் ஒப்படைப்பார்கள். நானும் மகிழ்வோடு செயலாற்றுவேன். - பின், அங்கே ஒரு மகளிர் உயர்நிலைப்பள்ளி, உண்டாக்க வேண்டுமென விரும்பினோம். கல்வித்துறையும் அரசாங்கமும் உடன் இசைவு தந்தனர். அரசாங்கப் பள்ளியாகவே அதை அமைக்க ஏற்பாடு. ஆயினும் அதற்குப் போதிய இடமில்லை. அப்பா அவர்கள் முயற்சியால் பெருநிலப்பரப்பினை சுமார் முப்பது ஏக்கர் நிலத்தினை வாலாஜாபாத் ஊர் எல்லையின் மேற்கே காஞ்சிக்குச் செல்லும் பாதையின் இருமருங்கிலும் வாங்கி இருந்தார்கள். எனவே அவர்கள் மகளிர் பள்ளி நடத்த இடம்தர முன் வந்தார்கள். பெண்கள் பள்ளியும் தொடங்கப் பெற்றது. அப்படியே அங்கேயே ஓர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும் தொடங்கப் பெற்றது. பின் அப்பா அவர்கள் மறைவுக்குப் பிறகு அவர்கள் பெயராலேயே, அவர்கள் அமைத்துச் சென்ற குழுவினர் ஒர் உயர்நிலைப் பள்ளியை அமைத்துள்ளனர். அனைத்தும் மேநிலைப்பள்ளி களாக இன்று அவ்வூருக்கும் பக்கத்தில் உள்ளாருக்கும் சிறக்கப் பணியாற்றுகின்றன. நான் 1944இல் சென்னை வந்தபோது சேத்துப்பட்டில் வாடகை வீட்டில் குடியிருந்தேன். அப்போது 1946இல்