பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் - 387 அமைந்தகரையில் ஒரு சிறு இடம் விலைக்கு வாங்கினேன். அப்போது அது நகர எல்லையில் கூடச் சேரவில்லை. எனவே குறைந்த விலைக்கே பெற்றேன். அதில் வீடு கட்டி 1949 சூன் முதல் தேதி குடியேறினேன். அப்போதுதான் செனாய்நகர் அமைப்பும் உருவாகி, பல வீடுகள் அமையப் பலரும் குடி யேறினர். நான் 1949இல் அங்கே வந்த பிறகு அந்த எல்லை விரைவாக வளர்ச்சி அடைவதைக் கண்டேன். எனினும் அந்த எல்லையில் ஒர் உயர்நிலைப் பள்ளி இல்லையே என எண்ணினேன். பல நாட்கள் எண்ணி, பல நண்பர்களையும் கண்டு பேசினேன். டாக்டர். மு. வ. அவர்களுடனும் இந்த எல்லையில் உள்ள வேறு ஆசிரியர்களுடனும் கலந்து பேசினேன். தற்போது திரு.வி.க. பூங்கா உள்ள பரந்தஇடம் மட்டுமன்றி வேறு சில இடங்களும் காலியாகவே இருந்தன. என் வீட்டுப் பக்கத்திலும் பல இடங்கள் இருந்தன. ஆயினும் அவை தனியாருடையவை. அவற்றை விலை கொடுத்து வாங்குவது எளிதன்று. அப்போது (1954) விலை அதிகம் இன்றேனும், அச்சிறு தொகையும் பெறவழியில்லை. அரசாங் கத்தைக் கேட்க நினைத்தேன். அப்போதும் திரு. பக்தவத் சலம் அவர்களை அணுகினேன். அவர்கள் மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்கள் இருப்பின் நீண்ட நாள் குத்தகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்றனர். அத்துடன் அன்று மாநகராட்சி ஆணையாளராக இருந்த திரு சுப்பராயன் அவர்களுக்கும் தொலைபேசியில் சொல்லி, தக்க ஏற்பாடு செய்யுமாறு கூறினர். நானும் அவ்வழியே முயன்றேன். இங்கேயே சிறந்த வகையில் நேரியமுறையில் செங்கல் வாணிபம் செய்து வந்த ஆதிநாராயணசாமி ரெட்டியார் அவர்களைப் போன்றோர் உதவ வந்தனர். அவர்தம் மகனார் திரு. நந்தகோபால் அவர்கள் உடன் உதவி நின்றார். பின் நாங்கள் வேண்ட, டாக்டர் சுந்தரவதனம் அவர்கள் அப்பள்ளிக் குழுவின் தலைவராக இருக்க இசைந்தனர். அப்