பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 ஆனந்த முதல் ஆனந்த வரை பொழுதெல்லாம் பள்ளிதொடங்குவதற்கும் அதற்கெனப் பல தேவைகளைப் பெறுவதற்கும் ஒரு குழு பதிவு செய்யப் பெற வேண்டும் என்ற விதி இருந்தது. வாலாஜாபாத் பள்ளிக் குழு போன்று தொடங்க உதவி விட்டு நிறுத்த வேண்டுமாயின் பதிவு தேவை இல்லை. பள்ளியைத் தொடர்ந்து நடத்த வேண்டுமாயின் பதிவு செய்யவேண்டிய தேவை உண்டாயிற்று, திரு. டாக்டர். சுந்தரவதனம் அவர்களைத் தலைவராகவும் என்னைச் செயலாளராகவும் திரு. நந்தகோபால் அவர் களைப் பொருளாளராகவும் கொண்டு வேறு நான்கு உறுப் பினர்களையும் இணைத்து, செனாய்நகர் உயர்நிலைப் பள்ளிக் குழு என்ற பெயரில் பதிவு செய்து கொண்டோம். பிறகு மாநகராட்சியை இடத்துக்காக அணுகினோம். திரு. சுப்பராயன் அவர்கள் மாநகராட்சி ஆணை யாளராகவும் இதே பேட்டையில் வாழும் திரு. மீரான் அவர்கள் தலைமைப் பொறியாளராகவும் இருந்தனர். திரு. பக்தவத்சலம் அவர்கள் கூறியபடி ஆணையாளர் எங்களுக்கு உதவினார்கள். எனினும் இடஒதுக்கீடு முதலிய வற்றைத் தலைமைப் பொறியாளரே செய்ய வேண்டி யுள்ளமையால் எங்களை அவர்களிடம் ஆற்றுப்படுத்தினர். நானும் திரு. நந்தகோபாலும் பல முறை மாநகராட்சிக்குச் செல்வோம். பெரும்பாலும் அங்கு வருவதைக் கண்ட நண்பர் ஒருவர் நீங்கள் என்ன இங்கே மாநகராட்சியில் பணி புரிகிறீர் களா? நாள்தோறும் உங்களைப் பார்க்கிறேனே" என்று கேட் டார். அத்தகைய எங்கள் முயற்சி திரு. மீரான் அவர்கள் விரைந்த செயல்பாட்டின் வழி நிறைவேறிற்று. செனாய்நகர் மேற்குப் பகுதியில் சுமார் ஐந்து ஏக்கர் நிலம் இருந்தது. ஆனால் அதை அடுத்துச்சுமார் நூறு குடிசை கள் இருந்தன. அவர்களை அப்புறப்படுத்தினால்தான் அந்த இடத்தில் ஏதேனும் செய்ய இயலும். அது தவிர்த்து வேறு