பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 ஆனந்த முதல் ஆனந்த வரை விட்டுவிட்டேன். என் பிறந்த நாளில் மட்டும் சென்று வழி பட்டு வரும் வழக்கத்தை இன்றளவும் மேற்கொண்டிருக் கின்றேன். பல கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்று பேசிய நிலையினைக் குறித்தேன். அவற்றுள் சில பற்றிய குறிப்புகள் என் நினைவுக்கு வருகின்றன. சூனாம்பேடு தமிழ் மன்றத்தில் அவ்வூரிலிருந்து சென்னைக்கு வந்து இரெயில்வேயில் பணி யாற்றிய திரு. சானகிராமன் அவர்கள் விருப்பப்படி பேச இசைந்து சென்றேன். அவர்தான் வரவேற்றார். அப்போது அவர் ஒரு நிபந்தனையிட்டார். என்பேச்சில் தேவார திருவாசக அடிகள்-மேற்கோள்கள் வராமல் பேசவேண்டும் என்றார். நான் பெரும்பாலும் தேவாரத் திருவாசக அடிகளை எடுத்துக் காட்டுவது உண்டு. அதற்கென அவ்வாறு கட்டளையிட்டார். நான் அவர் விழைவை நிறைவேற்றிய தாகவே கருதுகிறேன். அப்படியே திருக்குறள் மாநாடுகளிலும், பல தனிக் கூட்டங்களிலும் திருக்குறளைப் பற்றிப் பேசுவது உண்டு. சிறப்பாகக் காமத்துப்பாலில் வள்ளுவர் காட்டிய வாழ்க்கை நெறி பற்றியே என்னைப் பேசச் சொல்லுவார்கள். மற்றவர் கள் பிற தலைப்புகளை விரும்பி எடுத்துக் கொள்வதாலும், நான் வள்ளுவர் காமத்துப்பால் பற்றிக் கட்டுரைகளைஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளமையினாலும் அவ்வாறு வேண்டுவர். நானும் அவர்தம் விருப்பத்தை ஓரளவு நிறைவேற்றுவேன். நான் சொற்பொழிவுகளுக்குச் செல்லும்போது என் மாணவர் இரண்டொருவர் உடன் வருவர். அவர்களையும் பேசச் சொல்வேன். பல்கலைக் கழகங்களிலும் மூன்றிடங்களிலும் சொற் பொழிவாற்றியுள்ளேன். இதுபற்றி முன்னரே குறிப்பிட் டுள்ளேன். சென்னை, அண்ணாமலை, மதுரை ஆகிய மூன்று