பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 405 வர்களில் திருவாளர்கள் இராதா கிருஷ்ணப் பிள்ளை, கச்சாப கேச முதலியார், நடராசப் பிள்ளை, வேங்கடசாமி நாயுடு, துரைசாமி முதலியார், சீதாராமன் போன்றவர்கள் முக்கிய மானவர்கள். பின்னால் வந்த ஆட்சியாளர்கள் அனைவருமே என்னிடம் அன்பும் மதிப்பும் வைத்தே நடத்தி வந்தனர். அனைவரையும் தலைதாழ்ந்து வணங்கக் கடமைப் பட்டுள்ளேன். நான் கல்லூரியில் சேர்ந்தபோது இருந்த பல ஆசிரியர்கள் என்னை நன்கு பரிந்தேற்று மகிழ்ந்தனர். நான் கடைசியாக விட்டுவரும் வரையிலும் அத்தகைய பரிவும் பாசமும் அவர்கள் அனைவரிடமும் இருந்த நிலையினை எண்ணி இன்றும் மகிழ்கின்றேன். அப்படியே என்னிடம் பயின்ற மாணவர்களும் பிறதுறை மாண்வர்களும் தனியான மதிப்பும் மரியாதையும் என்னிடம் கொண்டிருந்தனர். சில சமயங்களில் இரண்டொருவர் மாறுபட்டாலும், கடைசியில் அவர்களும் அன்புடனேயே நடந்து கொண்டனர். இப்படி உடன் ஆசிரியர்களிடத்தும் மாணவரிடத்தும் முப்பது ஆண்டுகள் கழிந்ததை எண்ணி அடிக்கடி மகிழ்வேன். நான் தமிழாசிரியனாக இருந்தாலும் சில முக்கியமான பொறுப்புக்கள் என்வசம் அவ்வப்போது ஒப்பன்டக்கப் பெற்றன. நூலகத்தைக் காக்கும் பொறுப்பினைச் சில ஆண்டுகள் மேற்கொண்டேன். அப்போது சிறந்த நூலகர் திரு. செங்கல்வராயன் அவர்கள் இருந்தார்கள். எந்த நூல் புதிதாக வாங்கி வந்தாலும், அவர் படிக்காது உள் அனுப்ப மாட்டார். ஆராய்ச்சி மாணவர், ஆசிரியர்கள் கல்லூரியில் மட்டுமன்றிப், பல்கலைக் கழகத்திலிருந்தும் இங்கு நூல் களோடு தொடர்பு கொள்ள வருவார்கள். அவர்கள் கேட்கும் நூல்களை-உட்கார்ந்த இடத்திலேயே இடம், வரிசை எண் இவற்றைச் சொல்லி எடுத்துப் பார்க்கச் சொல்வார் இவர்,