பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள்மொழிக் காஞ்சி யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின் இன்னாது என்றலும் இலமே, மின்னோடு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும் மல்லல் பேரியாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆதலின், மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. புறம் 192-கணியன் பூங்குன்றனார்