பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

总领 ஆனந்த முதல் ஆனந்த வரை லும் உயிர் நீங்கிவிட்டபடியால் நாய்க்குட்டியைப் புதைத்து விடலாம் என்றார்கள். அப்படியே புதைத்துவிட்டு, அருகில் இருந்த ஊற்றில் முழுகி வீட்டுக்கு வந்து விட்டோம். மறுநாள் காலையில் அந்தத் தெருப்பள்ளிக்கூடத்தில் பாடம் படித்துக் கொண்டிருந்த் போது வாத்தியார்’ என்னைக் கூப்பிட்டார். ஏன் என்று எனக்குத் தெரியாது. அவர், 'நேற்றுச் சாயங்காலம் நீ உயிரோடு ஒரு நாய்க்குட் டியை ஆற்றில் புதைத்தாயாமே. மெய்தானா?” என்று கேட்டார். நான் நடுங்கிவிட்டேன். உள்ளது உள்ளபடியே நடந்தவற்றைச் சொன்னேன். அவர் இருக்கும், நான் அப்போதே நினைத்தேன்’ என்று சொல்லி அந்த இரு பிள்ளை களையும் கூப்பிட்டுப் பிரம்பைக் காட்டி மிரட்டி உண்மை யைக் கூறும்படிச் சொன்னார். அவர்களும் பிரம்புக்கு அஞ்சி நடந்ததை நடந்தபடிச் சொல்லிவிட்டார்கள். அந்த மாதிரிப் பொய்க் கதைகளைக் கட்டக்கூடாது என்றும் மேலும் குறும்பு செய்தால் தண்டனை அதிகமாகும் என்றும் எச்சரித்து அனுப்பினார். நானும் நடுங்கிக்கொண்டே பக்கத்தில் இருந் தேன். வெளியே வந்தால் அந்த இருவரும் என்ன செய்வார் களோ என்ற பயம்தான். ஆசிரியர் என்னை அருகே அழைத்து அந்தப் பொல்லாத பயல்களோடு சேரவேண்டாம். நல்லவர் களுடன் சேர்ந்து பழகு என்று எச்சரித்து அனுப்பினார். 'நல்லவர்கள் யார்?’ என்ற கேன்வி என் உள்ளத்தில் பிறந்தது. இந்தச்சேதி என் அம்மாவுக்கும் எப்படியோ தெரிந்தது, அவர்கள் என்னை நன்றாக அடித்துவிட்டார்கள். நான் செய் தது தவறோ சரியோ அதைப் பற்றி அவர்கள் கவலைப்பட வில்லை. அந்தப் பிள்ளைகளோடு சேர்ந்து பெயரைக் கெடுத் துக் கொண்டேன் என்பது தான் அவர்களுடைய வருத்தம். செத்த நாயை உயிருள்ள நாய் என்று அந்த இரண்டு பிள்ளை 'களும் ஊரில் எல்லாப் பிள்ளைகளிடமும் சொல்லிக் கேலி