பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ஆனந்த முதல் ஆனந்த வரை அதனால் நல்லவர் கண்களுக்கு அனைவரும் நல்லவராகத் தெரிவர். அல்லாதவர் கண்களுக்கு அனைவரும் மற்றவராகத் தெரிவர். இதுவும் உண்மைதானா? இன்றைய உலகில் நல்ல வரையும் கெட்டவரையும் இதன்படி பிரிக்க முடியுமா? கெட்டவர்கள் யார்? நல்லவர்கள் யார்? என்று எப்படிப் பிரிப்பது? உலகில் நடக்கும் கொடுமைகளுக்கெல்லாம் படித்த 'நல்லவர் தாமே காரணம். படித்தவர் நல்லவரா? அல்லாதவர் நல்லவரா? கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றும், அறிவில்லாத என் கன்மத்தை என் (சொல்லுகேன்?" என்ற அடிகள் எண்ணத்தக்கனவாம். இதற்கு முடிவு காண்பது எளிதன்று. யார் நல்லவர் என்று அறிஞர் உலகம் காணட்டும். 'கொல்லா விரதமெனக் கொண்டவரே நல்லோர்’ என்கின்றார் தாயுமானவர். ஆனால் இன்றைக்குப் பல பேரைக் கொன்று குவிக்கும் தலைவர்களையே எல்லாரும் நல்லவர் என்கின்றனரே? எது சரி? எண்ணிப் பார்க்கட்டும். 6. அல்லி அர்ச்சுனா எங்களுரில் அப்போது மாவட்ட ஆரம்பப்பள்ளிக்கூடம் ஆரம்பித்துச் சில ஆண்டுகளே ஆயிற்று என்னலாம். அதற்கு முன் சாதாரணக் கிராமப் பள்ளிக்கூடம்தான் இருந்தது. அந்தப் போர்டு பள்ளிக்கூடத்தில் நான் சேர்ந்து படித்து வந்தேன். எனது தெரு நண்பர்கள் எப்போதும் என்னோடு கூட இருப்பார்கள். பள்ளிக்கூடத்துத் தலைமை ஆசிரியர் நடேச அய்யர் என்பவர். அவர் முதன் முதல் ஆரம்பிக்கப்