பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 5 i கீர்த்தனைகள் நடந்த கதையைக் கூறாவிட்டாலும் காதுக்கு இனிமையாகப் பாடிக் கேட்கப் பயன்படுகின்றன. ஆனால் இந்த அல்லி அர்ச்சுனா பவளக்கொடி போன்ற நாடகங் கள் நல்ல தமிழிலும் இனிய பாட்டுக்களிலும் அமைந்தன வல்ல. ஏதோ கண்டவர் எழுதி அச்சிட, கண்டவர் நடித்த நாடகங்களாக அவை இருந்தன என்னலாம். அந்தக் காலத்தில் எனக்கு இந்த வகையிலெல்லாம் எண்ணத் தோன்றவில்லை. நாடகத்தில் நடிப்பதைப் பெறு தற்கரிய பேறு என நினைத்தேன். நல்ல வேளை நடேச ஐயர் எனக்கு அந்த . நாடகத்தில் கிருட்டினன் வேடம் கொடுத்தார். என் வீட்டில் அடிக்கடி அலங்காரம் செய்வார். கள். நான் என் வீட்டில் பிள்ளையும் பெண்ணுரமாக வளர்ந்த காரணத்தால் என் அன்னை நன்றாக நகைபூட்டி என்னை அலங்கரிப்பார்கள். பெண் வேடம் அணிவிப்பார்கள். என் தலையில் அதிக மயிர்த்திரள் இருக்கும். அதை அழகழகாகப் பின்னித் தொங்க விடுவார்கள். என் பாட்டிக்கு அழகாகப் பின்னத் தெரியும். கோயில் அம்மனுக்கு மலர் வகைகளில் அவர்கள் அழகாகப் பின்னல்களை வனைந்து தருவது வழக்கம். அந்த முறையில் எனக்குப் பின்னிப் பூச்சூட்டி, பெண்வேடம் புனைந்து, நகையூட்டி ஒப்பனை செய்து பார்ப் பார்கள். சில சமயம் கிருஷ்ணன் கொண்டை என்று தலையை முன்னே முடிந்து, அழகாகக்கட்டிக் கிருஷ்ண வேடமும் புனைவார்கள். அதை ஒருநாள் எங்கள் தலைமை ஆசிரியர் கண்டார். அந்த வேடம் எனக்குப் பொருத்தமான தாக இருந்ததாம். எனவே எனக்கு அல்லி அர்ச்சுனா’விலும் அதே கிருஷ்ண வேடத்தைக் கொடுத்தார். அல்லி அர்ச்சுனாவில் கிருஷ்ணன் வேடம் நல்ல பகுதிதான். அர்ச்சுனனுக்கு அல்லியை மனைவியாக்க வேண்டிய பொறுப்பு கிருஷ்ணனுடையது. கிருஷ்ணனும் அர்ச்சுனனும் தீர்த்த யாத்திரையின் போது மதுரைக்கு வர, அங்கு ஆண்வாடை