பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் . 53. என்ற பாட்டுத்தான் அது. இதில் ஒன்றுமில்லை என்று இப்போது தெரிகிறது. ஆயினும் அந்த இளமை வயதில் இது எப்படியோ என் மனத்தில் இடம் பெற்றுவிட்டது. இது போன்றே அல்லி பாடியதாக ஒரு பாடல். பெண் வேடத்தோடு காலைப் பிடித்துத் தன் கதையைச் சொல்லிவிட்டு ஓடிவிடுகிறான் அர்ச்சுனன். ஆம் அந்தக் கதையும் ஒரு நொண்டிச் சிந்துப் பாட்டால் ஆகியது. 'மாமதி மிகுமதுரை-வாழும் மாதரே அல்லி மகாராணி’ என்று தொடங்கித் தன் கதையைச் சொல்லி 'உனக்கு இசைந்த கணவன்-நான் தான் - உத்தமியே - (உந்தன் இருகாலைப் பிடித்தேன்' என்று முடித்து ஒடிவிடுகிறான். உடனே ஆண் வாடை விரும்பாத அல்லி ஆவேசத்தோடு எழுகிறாள்; அலறுகிறாள்; பக்கத்தில் இருந்த சேடியர்களையெல்லாம் அழைக்கிறாள்; பாடுகிறாள். - 'அஞ்சாத நெஞ்ச முற் றிங்ங்ணம் வந்தவன் ஆரடா (ஆரடா சொல் ஆண்மைத்தன மறியாத மடையனே ஓடாதே ஓடாதே கில் வஞ்சிமுன் கின்றிடில் நெஞ்சைப் பிளந்துனை வாட்டி . (வதைத்திடுவேன் வக்கனை பேசினாய் வெட்கமில்லாமலுன் வாயைக் - (கிழித்திடுவேன் கொஞ்சமும் அஞ்சாது மிஞ்சி எனக்கொரு:கொச்சைக் (கதை உரைத்தாய் கோதை முன் கின்று பதில் உரைக்காமலே பாதகா - (எங்கொளிங்தாய்' என்று பாடித் துள்ளிக் குதிக்கிறாள். இப்படி எத்தனையோ, பாடத் தெரியாத எனக்குக்கூட ஒரு பாட்டு. கிருஷ்ணன் குறத்தியாக வந்து அர்ச்சுனனுக்குக் குறி சொல்லுகிறான். எனக்குக் குறத்தி வேடம் போட்டார்கள். தெய்வம் வந்தது