பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 - ஆனந்த முதல் ஆனந்த வரை இருப்பார். அல்லது பக்கத்து வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர்கள் கேட்டிருப்பார்கள். அது எங்கள் அம்மாவிற்கு எப்படியோ எட்டிவிட்டது. அவரைக் கேட் டார்களோ இல்லையோ எனக்குத் தெரியாது. மறுநாளி லிருந்து நான் அவர்கள் வீட்டுக்குப் போகக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டார்கள். திங்கள் கிழமை தோறும் 'பசனை நடக்கும். அதற்கு அந்த மத்தளக்காரர் தான் முன் நின்று எல்லாவற்றையும் செய்வார். நான் தவறாது பசனைக்குப் போவேன். அம்மா அதுமுதல் அந்த பசனைக்கும் போக வேண்டாம் என்று கூறி விட்டார்கள், எனக்கு எவ்வளவுதான் பாட்டுக் கேட்பதிலும் மத்தளம் தட்டுவதைக் காண்பதிலும் ஆசை இருந்தாலும் அம்மாவின் சொல்லை மீற முடியாது; மீறினால் அடி உதை கிடைக்கும் என்ற அச்சம்தான். அந்தக் காலத்தில் எல்லாம். இப்படிக் கட்டுப்பாடு செய்கிறார்களே என்று அவர்கள் மேல் கோபித்துக் கொள்வது உண்டு. வெளியில் அல்ல; மனத்தில், என்றாலும் பின், புத்தி வந்த பிறகு அவர்கள் செய்து வந்த ஒவ்வொன்றும் எனக்கு எவ்வளவு நல்லதாக முடிந்தது என உணர்ந்து அவர்களைத் தெய்வமாகப் போற்றி வழிபடு கிறேன். அன்று அந்தப் பெரியவர் தன் பையனைப்போல் நானும் மத்தளம் கற்றுக் கொண்டு கலையில் வல்லவனாக வரக் கூடாது என்ற எண்ணத்தில் அப்படி எச்சரித்தார். நான் அன்று அவரை வெறுத்தேன். என்றாலும் இன்று அவர் எனக்கு நல்ல வரம் கொடுத்தவர் என நினைக்கின்றேன். அவர் அப்படித் தடுத்திருக்காவிட்டால், அதை அறிந்த அன்னை என்னைக் கட்டுப்பாடு செய்திராவிட்டால் நான் அந்த வேடிக்கைகளையெல்லாம் விட்டுச் சற்று கல்வியில் கவனம் செலுத்தி இருக்க முடியாது. கண்டவர்களோடு கூடி ஒரு வேளை மற்றவர்கள் பழக்கத்திலுள்ள பீ.டி பிடித்தல்,